Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (14:31 IST)
கோவை மாவட்டம். உக்கடம் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சியின் தெற்கு தொகுதி வேட்பாளர் அப்துல் வகாப். 

 
கோவை மாவட்டம் தெற்கு தொகுதியில், நாம் தமிழர் கட்சியின் சார்பில், விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் அப்துல் வகாப், இன்று உக்கடம் பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரிடமும், நேரடியாக துண்டறிக்கைகளை வழங்கி வாக்கு சேகரித்தார், இதனை தொடர்ந்து வாகன பிரச்சாரத்தை மேற்கொண்ட அவர், நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை ஒளிபெறுக்கியின் வாயிலாக அனைத்து மக்களிடத்திலும் எடுத்து கூறி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 
 
நாம்தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளான, அனைவருக்கும் தரமான கல்வி. அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும், ஏழை எளிய மக்கள் பயன் பெரும் வகையில் உயர்தரமிக்க கணினி மையங்கள் அமைக்கப்படும், அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகளின் திறமையை ஊக்குவிக்க தகுதியான ஆசியர்களை கொண்டு பயிற்சிகள் வழங்கப்படும். கல்லூரி மாணவ மாணவிகள் பயன் பெரும் வகையில் ஸ்கில்ஸ் டெவெலப்மென்ட் சென்டர் அமைக்கப்பட்டு அவர்கள் திறமையை மேம்படுத்த வலி வகை செய்யப்படும் அரசு கல்லூரிகளின் தரம் உயர்த்தப்படும், கல்லூரி மாணவர்களுக்கு படிக்கும் போதே வேலை வாய்ப்பு பயிற்சி மையங்கள் அமைத்து பயிற்சிகள் அளிக்கப்படும். 
 
தொகுதி உட்கட்டமைப்பு போக்குவரத்து நெரிசலை நீக்க சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் செயல்படுத்தப்படும் சாலைகள் சீரமைக்கப்படும், குடிநீர் பிரச்னைகள் தீர்க்க வழிவகை செய்யப்படும், கால் சென்டர் அமைத்து தொகுதி பிரச்சினைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பாதாள சாக்கடை பிரச்சனைகள் சரி செய்யப்படும் மருத்துவம் போன்ற அனைத்தின் தரங்களும் உயர்த்தபடும் போன்ற பல்வேறு வாக்குறுதிகளை எடுத்து கூறி பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

‘அமரனாக’ துப்பாக்கி பிடித்த சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா? ஊடகங்கள், ரசிகர்கள் கூறுவது என்ன?

இன்று மாலை 19 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தீபாவளி பட்டாசு வெடிவிபத்து: இதுவரை 21 பேர் தீக்காயம்..!

வயநாடு தேர்தல் எதிரொலி: மலையாளத்தில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரியங்கா காந்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments