நடக்க இருக்கும் தேர்தலுக்குப் பின் தமிழகத்தில் திமுக என்ற கட்சியே இருக்காது என்று பாஜக தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்று பாஜக மிகத்தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக மோடி முதல் யோகி ஆதித்யநாத் வரை முக்கியத் தலைவர்களை பிரச்சாரத்துக்காக இறக்கியுள்ளது. யோகி வந்த போது கோவையில் நடந்த பேரணியில் வன்முறை சம்பவங்கள் நடந்தது பாஜக மீது விமர்சனத்தை எழுப்பியுள்ளன.
இந்நிலையில் தாராபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல் முருகன் கோவை நடந்த தாக்குதலில் பாஜக மீதான புகார் தவறானது. பிரதமர் மோடி மிகப்பெரிய அளவிலான வெற்றியை தமிழகத்தில் தேடித் தரப் போகிறார். ஸ்டாலின் தோல்வி பயத்தில் இருக்கிறார். தேர்தலுக்கு பின் தமிழகத்தில் திமுக என்ற கட்சியே இருக்காது எனக் கூறியுள்ளார்.