Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விரைவு ரயில்கள் கூடுதலாக 7 இடங்களில் நி‌ன்று செ‌ல்லு‌ம்

விரைவு ரயில்கள் கூடுதலாக 7 இடங்களில் நி‌ன்று செ‌ல்லு‌ம்
, செவ்வாய், 19 அக்டோபர் 2010 (12:30 IST)
பொதும‌க்க‌ளி‌ன் வே‌ண்டுகோலு‌க்கு இண‌ங்க, ‌சில மு‌க்‌கிய ர‌யி‌ல்க‌ள், கூடுதலாக 7 ர‌யி‌ல் ‌நிலைய‌ங்க‌ளி‌ல் ‌நி‌ன்று செ‌ல்லு‌ம் எ‌ன்று தெ‌ற்கு ர‌யி‌ல்வே அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

பொதும‌க்க‌ள் ம‌ற்று‌ம் ம‌க்க‌ள் ‌பிர‌தி‌நி‌திக‌ள் கோ‌ரி‌க்கையை ஏ‌ற்று, இ‌ந்த ர‌யி‌ல் ‌நிலைய‌ங்க‌ளி‌ல் அடு‌த்த 6 மாத‌ங்களு‌க்கு சோதனை முறை‌யி‌ல் த‌ற்கா‌லிகமாக ர‌யி‌ல்க‌ள் ‌நி‌ன்று செ‌ல்லு‌ம் எ‌ன்று தெ‌ற்கு ர‌யி‌ல்வே கூ‌றியு‌ள்ளது.

அத‌ன் ‌விவர‌ங்க‌ள், சென்னை எழும்பூர்- திருச்சி விரைவு ரயில் (6853): தாம்பரம் (காலை 8.43- 8.45), பண்ருட்டி (காலை 11.39- 11.40), திருப்பாதிரிப்புலியூர் (பகல் 12.15- 12.17), வைத்தீசுவரன் கோவில் (பிற்பகல் 1.21- 1.22), புடலூர் (மாலை 3.08-3.09 மணி) ஆ‌கிய ர‌யி‌ல் ‌நிலைய‌ங்க‌ளி‌ல் ‌நி‌‌ன்று செ‌ல்லு‌ம்.

திருச்சி- சென்னை எழும்பூர் விரைவு ரயில் (6854): புடலூர் (காலை 9.41- 9.42), வைத்தீசுவரன் கோவில் (காலை 11.16- 11.17), திருப்பாதிரிப்புலியூர் (பகல் 12.43- 12.45), பண்ருட்டி (பிற்பகல் 108- 1.09) ஆ‌கிய ர‌யி‌ல் ‌நிலைய‌ங்க‌ளி‌ல் ‌நி‌ன்று செ‌ல்லு‌ம். இது வரும் நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.

புவனேசுவரம்- ராமேசுவரம் வாராந்திர விரைவு ரயில் (8496) புதுக்கோட்டை (மாலை 6.13- 6.15), சிவகங்கை (இரவு 8.13-8.15) ஆ‌கிய ‌நிலைய‌ங்‌க்‌ளி‌ல் ‌நி‌ன்று செ‌ல்லு‌ம். இது நவம்பர் 4 முதல் நடைமுறைக்கு வருகிறது.

ராமேசுவரம்-புவனேசுவரம்- வாராந்திர விரைவு ரயில் (8495): இந்த ரயில் சிவகங்கையில் காலை 9.58-க்கு வந்து 10 மணிக்குப் புறப்படும். புதுக்கோட்டையில் காலை 11.43-க்கு வந்து 11.45-க்குப் புறப்படும். இது நவம்பர் 7 முதல் நடைமுறைக்கு வருகிறது.

வாராணசி- ராமேசுவரம் வாராந்திர விரைவு ரயில் (4260): இந்த ரயில் புதுக்கோட்டையில் இரவு 7.24-க்கு வந்து 7.26-மணிக்குப் புறப்படும். சிவகங்கையில் இரவு 9.10-க்கு வந்து 9.12-க்குப் புறப்படும். இது வரும் நவம்பர் 2 முதல் நடைமுறைக்கு வருகிறது.

ராமேசுவரம்-வாராணசி வாராந்திர விரைவு ரயில் (4259): இந்த ரயில் சிவகங்கையில் பகல் 1.13-க்கு வந்து 1.15-மணிக்குப் புறப்படும். புதுக்கோட்டையில் பிற்பகல் 2.44-க்கு வந்து 2.46- மணிக்குப் புறப்படும். இது வரும் நவம்பர் 4 முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்த ரயில்களில் பயணம் செய்ய இ‌ன்று அதாவது அ‌க்டேபா‌ர் 19-ம் தேதி முதல் முன்பதிவு தொடங்குகிறது.

Share this Story:

Follow Webdunia tamil