Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மேல்மருவத்தூரில் ‌விரைவு ரயில்கள் ‌நி‌ற்கு‌ம்

மேல்மருவத்தூரில் ‌விரைவு ரயில்கள் ‌நி‌ற்கு‌ம்
, புதன், 21 அக்டோபர் 2009 (11:46 IST)
இருமுடி, தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு, மேல்மருவத்தூரில் ‌விரைவு ரயில்கள் நின்று செல்லும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருமுடி மற்றும் தைப்பூச திருவிழா கொண்டாடப்படுவதையொட்டி நவம்பர் 11-ந் தேதி முதல் வருகிற ஜனவரி 30-ந் தேதி வரை மேல்மருவத்தூரில் ‌விரைவு ரயில்கள் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, மலைக்கோட்டை, வைகை, பாண்டியன், பொதிகை, சம்பார்க் கிராந்தி, மதுரை வாரந்தரம், நாகர்கோவில் வாரந்தரம், திருக்குறள் ஆகிய அனைத்து ‌விரைவரயில்களும் போகும் போதும் வரும் போதும் நின்று செல்லும்.

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் (வ.எண். 0657) வியாழக்கிழமை (அ‌க்.22) பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 6.50 மணிக்கு திருச்செந்தூரை சென்றடையும்.

மறுமார்க்கம், திருச்செந்தூரில் இருந்து 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 9.15 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரெயில்( 0658) மறுநாள் பகல் 1 மணிக்கு சென்டிரலை வந்தடையும்.

இந்த ரெயில்கள் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், வாஞ்சி மணியாச்சி, நெல்லை, செய்துங்கநல்லூர், நாசரேத், ஆறுமுகனேரி, காயல்பட்டினம் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

திருச்செந்தூரில் இருந்து வரும் சிறப்பு ரயில் பெரம்பூரிலும் கூடுதலாக நிற்கும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (புதன்கிழமை) காலை தொடங்‌கியது எ‌ன்று தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil