Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சோளிங்கர் கோவி‌லி‌ல் ரோப் கார் ‌அமை‌க்க யோசனை

சோளிங்கர் கோவி‌லி‌ல் ரோப் கார் ‌அமை‌க்க யோசனை
, செவ்வாய், 1 செப்டம்பர் 2009 (10:59 IST)
மலை‌க‌ளி‌ல் கோ‌யி‌ல்களை‌க் கொ‌ண்ட சோ‌ளி‌ங்க‌ர் கோ‌யிலு‌க்கு ப‌க்த‌ர்க‌ள் செ‌ல்வத‌ற்கு வச‌தியாக ரோ‌ப்கா‌ர் சேவையை அமை‌க்க ‌தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்டு அது கு‌றி‌த்து ப‌ரி‌சீ‌லி‌த்து ஆலோசனை வழ‌ங்க த‌மிழக முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கையினை ஏற்று, வேலூர் மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவிலில் கம்பி வட ஊர்தி (ரோப் கார்) அமைப்பது என அரசு முடிவு செய்துள்ளது.

இந்த பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி தயாரித்தல், ஒப்பந்தப்புள்ளி பரிசீலனை செய்தல், ஒப்பந்ததாரர் நிர்ணயம் செய்தல் போன்றவற்றிற்கு தக்க ஆலோசனைகளை வழங்கிட வல்லுனர் குழு ஒன்றினை அமைத்து முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

இக்குழுவில் இந்திய தொழில்நுட்பக் கழகம் - கட்டுமான ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் பேராசிரியர்களும், பொதுப்பணித்துறை -தமிழ்நாடு மின்சார வாரியம் ஆகியவற்றின் அனுபவம், மிக்க அலுவலர்களும், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களும் இடம்பெற்றுள்ளனர் எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil