Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுதந்திர எக்ஸ்பிரஸ் இரயில்: 20ஆ‌ம் தேதி வரை பார்க்கலாம்!

Advertiesment
இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் சுதந்திர எக்ஸ்பிரஸ் இரயில் சென்னை சென்‌ட்ரல் ஜனவ‌ரி 20ஆ‌ம் தேதி
, வெள்ளி, 23 செப்டம்பர் 2011 (17:08 IST)
இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வரும் சுதந்திர எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று சென்னை சென்‌ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்தது. ‌பிளா‌ட்பார‌ம் டி‌க்கெ‌ட் எடு‌க்காம‌ல் இலவசமாக ஜனவ‌ரி 20ஆ‌ம் தேதி வரை இந்த ரயிலை பொது‌ம‌க்க‌ள் பா‌ர்‌க்கலா‌‌ம்.

முதல் சுதந்திரப் போரின் 150-வது ஆண்டு விழா, பகத்சிங் பிறந்த தின நூற்றாண்டு விழா, இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டு நிறைவு ஆகிய நிகழ்ச்சிகளின் தொடக்கத்தையொட்டி, சுதந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. சுதந்திர போராட்டம் பற்றிய கண்காட்சி இந்த ரயிலில் இடம் பெற்றுள்ளது.

சுதந்திர எக்ஸ்பிரஸ் ரயில் 2007-ம் ஆண்டு செப்டம்பர் 28ஆ‌ம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டது. 9 மாத காலத்தில் 21 மாநிலங்களைச் சேர்ந்த 70 இடங்களுக்கு இந்த ரயில் வந்து செல்லும். அதன்படி, மே 11ஆ‌ம் தேதி வரை இந்த ரயில் ஓடும்.

சென்னை சென்‌ட்ரல் ரயில் நிலையத்தில் 11-வது பிளாட்பாரத்திற்கு இந்த ரயில் நேற்று வந்தது. இர‌யிலில் 11 பெட்டிகள் உள்ளன. அனைத்து பெட்டிகளிலும் சுதந்திர போராட்ட வீரர்கள், வீராங்கனைகள், தியாகிகள் பலரது வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வரைபடங்கள், கட்அவுட்கள், புகைப்படங்கள், தியாக சின்னங்கள் உட்பட பல அம்சங்களை உள்ளே காண முடியும். வீர சிவாஜி, அரவிந்த், சர்தார் வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ், அம்பேத்கர், பாரதியார் ஆகியோரது வாழ்க்கை வரலாறு சித்தரிக்கப்பட்டு உள்ளன.

காந்தியடிகளின் பிறப்பு முதல் இறப்பு வரை அவர் இருக்கும் புகைப்படங்கள் பெரிதாக்கப்பட்டு வைக்கப்பட்டு உள்ளன. மனைவி கஸ்தூரி பாய், சகோதரர் லட்சுமிதாஸ் ஆகியோருடன் காந்தி இருக்கும் அரிய புகைப்படங்களை இங்கு காணலாம். காந்தியடிகள் மேற்கொண்ட உப்புசத்தியா கிரகத்தை, நேரடியாக காண்பது போல் தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டு உள்ளது.

இவை தவிர ஜாலியன் வாலாபாக் படுகொலை, இந்தியரை நிர்வாணமாக கட்டி வைத்து ஆங்கிலேயர் கொடுமைப்படுத்தும் காட்சி உள்ளிட்ட பல சரித்திர சம்பவங்களை புகைப்படமாக பார்க்கலாம். ரயிலின் அருகே வைக்கப்பட்டு உள்ள அரங்கில் தில்லையாடி வள்ளியம்மை, வாஞ்சிநாதன், வ.உ.சிதம்பரனார், ராஜாஜி, பக்தவச்சலம், காமராஜர், முத்துராமலிங்க தேவர் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் படங்கள் வைக்கப்பட்டு உள்ளன.

இது பற்றி மத்திய இர‌யி‌ல்வே இணை அமை‌ச்ச‌ர் வேலு கூறுகை‌யி‌ல், நிர்ணயிக்கப்பட்ட ஒவ்வொரு இடங்களிலும் 2 அல்லது 3 நாட்கள் இந்த ரயில் நிற்கும். சென்னையில் 20ஆ‌‌ம் தேதி வரை ரயில் நிற்கும். 21ஆ‌ம் தேதி காலையில் இருந்து மதியம் வரை அரக்கோணத்தில் நிற்கும். பின்னர் காட்பாடிக்கு செல்லும். அங்கிருந்து கர்நாடகாவுக்கு சுதந்திர ரயில் செல்கிறது. இந்த ரெயிலை பார்ப்பதற்கு பிளாட்பாரம் டிக்கெட் எடுக்க தேவையில்லை. இலவசமாக காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை பார்த்துச் செல்லலாம் எ‌ன்றா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil