Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

க‌ற்‌சி‌ற்ப‌ங்க‌ளி‌ன் ‌சி‌ற்ப வளாக‌ம்

Advertiesment
மதுரை கற்சிற்பங்கள் சிற்ப வளாகம்
, வியாழன், 22 ஜனவரி 2009 (12:26 IST)
மதுரை‌யி‌ல் உ‌ள்ள திருமலை நாயக்கர் அரண்மனையை, மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் கி.பி. 1636 ஆம் ஆண்டில் கட்ட‌ப்ப‌ட்டது.

இ‌ந்த ‌திருமலை நாய‌க்க‌‌ர் அர‌ண்மனை திருமலை நாயக்கர் மகால் எ‌ன்று‌ம் அழை‌க்க‌ப்படு‌கிறது.

புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தென்கிழக்குத் திசையில் இ‌ந்த மகா‌ல் அமைந்துள்ளது. இத்தாலியக் கட்டிடக் கலைஞர் ஒருவரால் வடிவமைக்கப்பட்டதாகக் கருதப்படும் இக் கட்டிடத்தின் நான்கில் ஒரு பகுதியே தற்போது எஞ்சியுள்ளது எ‌ன்று‌ம் இத‌ன் வரலாறு கூறு‌கிறது.

இந்து ம‌ற்று‌ம் இ‌ஸ்லா‌மிய க‌ட்டட அமை‌ப்புக‌ளி‌ன் கலவையாக அதாவது இந்தோ சரசனிக் பாணி என அழைக்கப்படும் கட்டிடககலை‌யி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் இ‌ந்த அரண்மனை வடிவமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்த அர‌ண்டனை இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டதாக அமைந்திருந்தது. ஒன்று சொர்க்க விலாசம் என்றும் மற்றது ரங்க விலாசம் என்றும் அழைக்கப்பட்டன. சொர்க்க விலாசம் மன்னரின் வசிப்பிடமாகவும், ரங்க விலாசம் அவரது தம்பியான முத்தியாலு நாயக்கரின் வசிப்பிடமாகவும் இருந்தது.

மேலு‌ம் இசை மண்டபம், நாடக சாலை, பல்லக்குச் சாலை, ஆயுத சாலை, வழிபாட்டிடம், வேறு அரச குடும்பத்தினர்க்கும், பணியாளர்களுக்குமான வசிப்பிடங்கள், அந்தப்புரம், பூங்காக்கள், தடாகங்கள் போன்ற பல்வேறு பகுதிகள் அடங்கியிருந்தன.

த‌ற்போது இது சு‌ற்றுலா‌ப் ப‌ய‌ணிகளு‌க்கான தலமாக மா‌றி‌வி‌ட்டது. மேலு‌ம் சு‌ற்றுலா‌ப் பய‌ணிகளை கவரு‌ம் வகை‌யி‌ல், அ‌ரிய க‌ற்‌சி‌ற்ப‌ங்க‌ள் கொ‌ண்ட பு‌திய ‌சி‌ற்ப வளாக‌ம் அமை‌க்கு‌ம் ப‌ணி நட‌ந்து வரு‌கிறது.

ப‌ணிக‌‌ள் நட‌ந்து முடி‌ந்து ‌விரை‌வி‌ல் ‌திற‌ப்பு ‌விழா நட‌த்தவு‌ம் ‌தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்டு வரு‌கிறது.

சி‌ற்ப‌‌ங்க‌ள் முழுவதுமாக செ‌ய்ய‌ப்ப‌ட்டு ‌திற‌ப்பு ‌விழா முடி‌ந்த ‌பி‌ன்ன‌ர் பல சு‌ற்றுலா‌ப் பய‌ணிக‌ளி‌ன் க‌ண்களு‌க்கு இது ‌விரு‌ந்து படை‌க்கு‌ம் எ‌ன்ப‌தி‌ல் ச‌ந்தேக‌ம் இ‌ல்லை.

Share this Story:

Follow Webdunia tamil