குற்றாலத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, பெய்த மழையால் அங்கு அருவிகளில் தண்ணீர் கொட்டியது. ஆனால் கடந்த வாரத்தில் குற்றாலத்தில் அருவிகளில் நீர் கொட்டுவது குறைந்துள்ளது.
இதனால், கோடை விடுமுறையை குற்றாலத்தில் கழிக்கலாம் என்று அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.
குற்றாலத்தில் சீசன் மற்றும் மழைக் காலத்தில் மட்டுமே நீர் கொட்டுகிறது. கடந்த வாரத்தில் மழை காரணமாக அருவிகளில் நீர் கொட்டியது. இந்த செய்தியை அறிந்து பல சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்திற்கு வந்தனர்.
ஆனால் தற்போது குற்றால அருவிகளில் நீர் கொட்டுவது குறைந்துவிட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.