Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை குறளகத்தில் கொலு பொம்மை கண்காட்சி

சென்னை குறளகத்தில் கொலு பொம்மை கண்காட்சி
, சனி, 8 ஆகஸ்ட் 2009 (12:01 IST)
தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் சார்பில் செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள குறளகத்தில் காதி கிராப்ட் கொலு பொம்மை கண்காட்சி நே‌ற்று‌த் துவ‌ங்‌கியது. க‌ண்கா‌‌ட்‌சி‌யினை தமிழ்நாடு அரசு கைத்தறி, கைவினை, துணிநூல் மற்றும் கதர் துறை முதன்மை செயலர் ஆர்.ராஜகோபால் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

நே‌ற்று‌த் துவ‌ங்‌கிய இ‌ந்த க‌ண்கா‌ட்‌சி தொட‌ர்‌ந்து 57 நாட்கள் நடைபெறுகிறது.

webdunia photo
WD
க‌ண்கா‌ட்‌சியை‌த் துவ‌க்‌கி வை‌த்து‌ப் பே‌சிய ராஜகோபா‌ல், "கடந்த ஆண்டு கொலு பொம்மை கண்காட்சியில் 83.87 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது. இந்த வருடம் ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருதாசலம், திண்டிவனம், கடலூர், நெல்லை, விழுப்புரம் உள்பட புதுச்சேரி, கர்நாடகா ஆகிய பகுதியில் இருந்து கைவினை பொருட்கள் மற்றும் பளிங்கு பொம்மை, கிளிஞ்சல் பொம்மைகள், சந்தனமரம், கண்ணாடி போன்றவற்றில் செய்யப்பட்ட பொம்மைகள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. ரூ. 30 முதல் 30 ஆயிரம் வரையிலான பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil