Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோ-ஆப்டெக்ஸ் ஆடைக‌ள் கண்காட்சி

கோ-ஆப்டெக்ஸ் ஆடைக‌ள் கண்காட்சி
, செவ்வாய், 4 ஆகஸ்ட் 2009 (11:49 IST)
சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் தில்லையாடி வள்ளியம்மை பட்டு மாளிகையில் கோ-ஆ‌‌ப்டெ‌க்‌சி‌ன் ஆடைக‌ள் க‌ண்கா‌ட்‌சி ம‌ற்று‌ம் ‌வி‌ற்பனை துவ‌ங்‌கியது. இதனை தலைமை செயலாளர் ஸ்ரீபதி நேற்று துவ‌க்‌கி வை‌த்தா‌ர்.

க‌ண்கா‌ட்‌சியை‌த் துவ‌க்‌கி வை‌த்த ஸ்ரீப‌தி, பட்டு துணிகளை ஒவ்வொன்றாக பார்வையிட்டார். அவருக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் இயக்குனர் வெ.சந்திரசேகர் ஒவ்வொரு துணியின் ரகம் மற்றும் அதன் சிறப்புகள் குறித்து விளக்கமளித்தார்.

தில்லையாடி வள்ளியம்மை பட்டு மாளிகையில் நடைபெறு‌மஇ‌ந்க‌ண்கா‌ட்‌சி‌யி‌லகோ-ஆப்டெக்ஸ் பட்டு, பருத்தி ஆடைகள், டிசைனர் கலெக்ஷன் ஆ‌கியவஇட‌ம்பெ‌ற்று‌ள்ளன.

இந்த நிகழ்ச்சியில், மேஜிக் டிசைனர் சேலை, திருக்குறள் சேலை, தேசபிதா காந்தியின் தண்டி யாத்திரையை நினைவுபடுத்தும் திரைசீலைகள், பருத்தி சேலை வகைகள், அடுக்குதுகில் சேலை, மயில்தோகை சேலை, சேலை முழுவதும் தமிழில் எழுதப்பட்ட செம்மொழி சேலை, உயர்ந்த கைத்தொழில் நுட்பத்தை உடைய தங்ககோபுர சேலை போன்ற சேலை வகைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

இந்த விழாவின் இறுதியின் சேலை வகைகளை சிறப்பாக வடிவமைத்தற்காக, வடிவமைப்பாளர் ரவிகுமார் மற்றும் அவரது உதவியாளர் சங்கர் ஆகியோருக்கு தலைமை செயலர் ஸ்ரீபதி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்த மையத்தில் பெண்களுக்கான பட்டு சேலை வகைகள், சுடிதார் வகைகள், ஆண்களுக்கான பருத்தி சட்டைகள் மற்றும் வேட்டி வகைகள் உள்பட பலவகையான பருத்தி ஆடைகள் பலதரப்பட்ட விலையில் கிடைக்கின்றன.

இங்கு காலை 10 மணிமுதல் இரவு 8.30 மணி வரை விற்பனை நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்துறை முதன்மை செயலாளர் ஆர்.ராஜகோபாலன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குனர் சந்திரசேகரன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil