குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக குற்றால அருவியில் நீர்வரத்து அதிகமாக உள்ளது. பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி நீர் விழுகிறது.
கடந்த வாரத்தில் குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டுவது மிகவும் குறைவாக இருந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைந்தது.
ஆனால் இந்த வாரத்தின் துவக்கம் முதலே அருவிகளில் அதிகமான தண்ணீர் கொட்டுகிறது. தற்போதுதான் குற்றால அருவியே களை கட்டியுள்ளது.
இந்த செய்தியைக் கேள்விப்பட்டதும், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தை நோக்கி படையெடுத்துள்ளனர். ஏராளமானவர்கள் குற்றால அருவிகளில் குதூகலமாக குளித்துவிட்டுச் சென்றனர்.
சென்னை மற்றும் சில பகுதிகளில் கடுமையான வெப்பம் காணப்படுவதால், வெப்பத்தைத் தணித்துக் கொள்ள பலரும் குற்றாலம் சென்று வருகின்றனர்.
முக்கிய அருவில், ஐந்தருவிகளிலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காணப்படுகின்றனர்.