Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கன்னி: ஆனி மாத ராசி பலன்கள் 2021

Advertiesment
கன்னி: ஆனி மாத ராசி பலன்கள் 2021
, செவ்வாய், 15 ஜூன் 2021 (17:00 IST)
(உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை: தைரிய  ஸ்தானத்தில் கேது -  பஞ்சம  ஸ்தானத்தில் சனி (வ) -  ரண ருண ரோக  ஸ்தானத்தில் குரு (அதி. சா)  - பாக்கிய  ஸ்தானத்தில் புதன், ராஹூ - தொழில்  ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் -  லாப  ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் என  கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
உழைப்பின் மூலம் உன்னத நிலையை அடையும் கன்னி ராசியினரே நீங்கள் மற்றவர்களின் சிரமமான காலகட்டத்தில் உதவி செய்வதில் தயங்காதவர். இந்த மாதம்  நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தந்தை மூலம் செலவு உண்டாகலாம்.  வெளியூர்  பயணம் செல்ல நேரிடலாம். தாய் வழி உற்வினர்களுடன் இருந்து வந்த தேக்க நிலை மாறும். நண்பர்கள் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். 
 
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு வேலைபளு குறைந்து வீண் அலைச்சலும் குறையும். ஆனால் பணியை பற்றிய  சிந்தனை அதிகரிக்கும்.
 
குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலைதூக்கி பின்னர் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும்.  பிள்ளைகளால் செலவும் ஏற்படும்.  உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும்.
 
பெண்களுக்கு தடைபட்ட காரியங்களில் தடைநீங்கி சாதகமாக நடக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். மாணவர்களுக்கு  கல்வியில் எதிர்பார்த்த  வெற்றி  கிடைக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள்.
 
கலைத்துறையினருக்கு அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். புதிதாக வீடு,  மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும். 
   
அரசியல் துறையினருக்கு விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும்.  வேலையில் கவனமுடன் செல்வது நல்லது.
 
உத்திரம்:
இந்த மாதம் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்கு சாதகாமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல  சம்பளத்துடன் வேலை கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவலகள் வந்து சேரும்.
 
ஹஸ்தம்:
இந்த மாதம் அலைச்சல் இருக்கும். சிலர் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்கள் குழந்தைகளால் சிற்சில  பிரச்சனைகள் வரலாம். அதற்காக உங்களின் குழந்தைகள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் வரும் கஷ்டங்களை தாங்கிக்  கொள்ளுங்கள்.
 
சித்திரை:
இந்த மாதம் தம்பதிகளிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். திருமணமாகாமல் அதற்குண்டான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு திருமணம் இனிதே நடந்தேறும். புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை  செய்தவர்களின் எண்ணம் ஈடேறும்.
 
பரிகாரம்: தினமும் பெருமாளை வணங்க வறுமை நீங்கி வாழ்வு வளம் பெறும். பகை விலகும். எதிர்ப்புகள் அகலும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை: 4, 5
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன்: 27, 28.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்மம்: ஆனி மாத ராசி பலன்கள் 2021