Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விருச்சிகம் - மார்கழி மாத பலன்கள் 2021

Advertiesment
விருச்சிகம் - மார்கழி மாத பலன்கள் 2021
, வியாழன், 16 டிசம்பர் 2021 (14:47 IST)
(விசாகம் 4ம் பாதம்,அனுஷம், கேட்டை) - கிரக நிலை: களத்திர ஸ்தானத்தில் ராஹூ - ராசியில் செவ்வாய், கேது - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக், சனி - சுக ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
யாரிடத்திலும் பேசும் முன் யோசனை செய்யாமல் பழக ஆசைப்படும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் தன்னம்பிக்கை வளரும். பணவரவு திருப்தி தரும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். ஆனாலும் தேவையற்ற வீண் பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. அறிவுத்திறன் அதிகரிக்கும். பெயருக்கும், புகழுக்கும் பங்கம் வரலாம்.
 
குடும்பத்தில் பொருளாதார மேன்மையும் புகழும் நிறைவாக கிடைக்கும். புத்திரர்கள் தவறான பழக்க வழக்கம் உள்ள நபர்களுடன் சேர்த்து சிரமப்படும் வாய்ப்புகள் உள்ளதால் விழிப்புடன் செயல்படுவது நன்மை தரும். கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் சிலரது குறுக்கீடுகளில் மனக்கசப்புகள் தோன்றி பின்னர் படிப்படியாக நிலைமை சீராகும். 
 
தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் வெற்றியும் புகழும் பெறுவார்கள். ரியல் எஸ்டேட் செய்பவர்கள் தங்கள் தொழிலை வளர்த்துக் கொள்வார்கள். தொழில் ரீதியாக புதிய ஆலோசகர்கள் கிடைத்து தொழில் சிறக்க வழி காட்டுவார்கள். வாகனங்களில் செல்லும் பொழுது மிகுந்த கவனமுடன் யெல்படுவது நல்லது.
 
உத்தியோகஸ்தர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சி தரும் வகையிலான பணிவாய்ப்புகளைப் பெறுவார்கள். அரசு சுற்றுலா துறையில் பணிபுரியும் அதிகாரிகளும் தனியார் சுற்றுலா நிறுவன அதிகாரிகளும் பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து பொருளாதார நிலை உயரப்பெறுவர். 
 
பெண்கள் உடல்நலனில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். கணவரை விட்டுப் பிரிந்தவர்கள் கணவருடன் மீண்டும் சேர்வார்கள். உங்களின் கணவருக்கு உங்களால் அனுகூலம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிட்டும். நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வாய்ப்புகள் கைகூடிவரும்.
 
கலைத்துறையினர் சிறந்த சாதனை படைத்து பாராட்டுகளும் விருதுகளும் பெறுவார்கள். மனம் ஆன்மிக வழியை அதிகம் நாடும். பேசும் வார்த்தைகளில் அனல் வீசும். நற்செயல்கள் செய்வதினால் புகழ் பலம் பெறுவீர்கள். 
 
அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல நிலை கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மரியாதை கிடைக்கும். பணத்தை இழக்க நேரிடலாம். நம்பிக்கையானவர்களிடம் மட்டும் பணத்தைக் கொடுப்பது நல்லது. உயர்பதவிகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல நிலை வந்து சேரும். 
 
மாணவர்கள் அறிவியல் தொழில்நுட்ப மாணவர்களும் ஆரம்ப நிலை மாணவர்களும் படிப்பினில் ஆர்வம் காட்டி பெற்றோருக்கு நற்பெயர் வாங்கித்தருவர். வக்கீல் தொழிலில் ஜூனியராக இருந்து பயிற்சி பெறும் மாணவர்கள் தகுந்த சமயத்தில் சட்ட நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள்.
 
விசாகம் 4ம் பாதம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான பலன் கிடைக்க பெறுவார்கள். புதிய பொறுப்புகள் சேரும். வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும். பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும். காரிய அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம். 
 
அனுஷம்:
இந்த மாதம் குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். அரசியல்வாதிகளுக்கு மனதில் தைரியம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கல்வியில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு பாடங்களை படிப்பீர்கள்.
 
கேட்டை:
இந்த மாதம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரியங்களை செய்து முடிப்பதில் கடினமான நிலை காணப்படும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிரமமின்றி செய்து முடிப்பார்கள். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். சுமுக உறவு இருக்கும். 
 
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் அம்பாள் கோவிலுக்குச் சென்று காலையில் 3 முறை வலம் வரவும். 
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துலாம் - மார்கழி மாத பலன்கள் 2021