Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விருச்சிகம்: புரட்டாசி மாத ராசி பலன்கள்

விருச்சிகம்: புரட்டாசி மாத ராசி பலன்கள்
, வியாழன், 17 செப்டம்பர் 2020 (12:21 IST)
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) - கிரகநிலை: ராசியில் கேது - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு, சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய்(வ) - களத்திர ஸ்தானத்தில் ராஹு - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில்  சந்திரன் - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரகங்கள் வலம்  வருகின்றன.

பலன்:
இந்த மாதம் நல்ல பலன்களைப் பெறுவதில் சிரமம் இருக்காது.  வீணாக மனதை உறுத்திக் கொண்டிருந்த கவலை நீங்கும். எவ்வளவு திறமையுடன்   செயல்பட்டாலும் காரிய தடங்கல் ஏற்படலாம். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. பயணத்தினால் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகும்.
 
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள்  சாதகமாக நடந்து முடியும். வியாபார போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள். பணி நிமித்தமாக  வெளிநாடு செல்ல வேண்டி வரும். 
 
மாணவர்களுக்கு  புத்திசாதூரியம் வெளிப்படும். கல்வியில் இருந்த தொய்வு நீங்கும்.
விசாகம் 4ம் பாதம்:
இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு  வருவதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகம் பற்றி யாருடனும் விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது. பதவி உயர்வு, சம்பள  உயர்வு தாமதப்படலாம்.
 
அனுஷம்:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு டென்ஷன் தருவதாக இருக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வதும் அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பதும் நல்லது.
 
கேட்டை:
இந்த மாதம் கோபத்தை கட்டுப் படுத்துவதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும். வீண் செலவை தடுக்க திட்டமிட்டு செயல் படுவது நல்லது. மாணவர்கள் சக மாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மிகவும் பொறுமையுடனும், கவனமாகவும் பாடங்களை படிப்பது அவசியம்.
 
பரிகாரம்: திருமுருகாற்றுபடையை பாராயணம் செய்து வர கந்தன் அருளால் கண்டபிணி நீங்கும். குடும்ப கஷ்டம் தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 9, 10
அதிர்ஷ்ட தினங்கள்: அக்டோபர் 1, 2, 3.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துலாம்: புரட்டாசி மாத ராசி பலன்கள்