Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனுசு: ஐப்பசி மாத ராசி பலன்கள் 2022

Advertiesment
Dhanusu
, செவ்வாய், 18 அக்டோபர் 2022 (17:23 IST)
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) - கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில்  சனி -  சுக ஸ்தானத்தில்  குரு(வ)  - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில்  ராகு -  சப்தம ஸ்தானத்தில்  செவ்வாய்  -  அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில்  சந்திரன் -  தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில்  புதன், சுக்கிரன்  -  லாப ஸ்தானத்தில்  சூர்யன்,  கேது  என கிரகநிலை இருக்கிறது.


பலன்:
திறமையையே மூலதமான வைத்து வாழ்வில் உயர்ந்த நிலைக்கு செல்லும் தனுசு ராசியினரே நீங்கள் ஒழுக்கமாக வாழ வேண்டும் என விரும்புபவர்கள். இந்த மாதம் வாக்கு வன்மையால் எதையும் சாதகமாக செய்து முடிப்பீர்கள். திறமை அதிகரிக்கும். திட்டமிட்டபடி செயலாற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் எச்சரிக்கை தேவை.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சினால் எதிலும் லாபம் காண்பார்கள். வர்த்தக திறமை அதிகரிக்கும். பணவரத்தும் திருப்திகரமாக இருக்கும். தொழில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையால் முன்னேற்றமடைவார்கள். இழுபறியாக இருந்த வேலையை துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக வராமல் இருந்து வந்த பணம் கைக்கு வந்து சேரும்.

குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கனிவுடன் பேசுவது நல்லது. விருந்தினர் வருகை இருக்கும். குடும்ப பிரச்சனைகளில் சாதகமான முடிவே உண்டாகும். பெண்களுக்கு துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின் போதும் கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு பயணத்தால் அனுகூலம் உண்டு. அதிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பொருள் வரவில் குறைவு ஏற்பட வாய்ப்பு இல்லை. எந்த நேரத்திலும் கோபம் கலந்த வார்த்தைகளை உதிர்க்காமல் இருப்பது நன்று. அரசியல் துறையினருக்கு உறுதியும், துணிவும் நிறைந்திருக்கும். பிரபலங்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். மாணவர்களுக்கு திறமையால் முன்னேற்றம் உண்டாகும். கஷ்டமான பாடங்களையும் துணிச்சலாக படித்து முடிப்பீர்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

மூலம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த  பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். வியாபார போட்டிகள் தடை தாமதங்கள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள்.  பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் உண்டாகும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள்.

பூராடம்:
இந்த மாதம் எவருக்கும் அவசரப்பட்டு வாக்கு கொடுக்கமாட்டீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உங்கள் சொல்லுக்குக் கட்டுப்படுவார்கள். பெரிய எதிர்பார்ப்புகள் கைகூடும். அரசாங்க வழியிலும் சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். குடும்பத்தில் அமைதி குறைவது போல் தோன்றும் சகோதரர்கள் வழியில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கலாம் கவனம் தேவை.  பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும்.

உத்திராடம் 1ம் பாதம்:
இந்த மாதம் விருப்பமான நபரை சந்தித்து மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். வீண் பேச்சுக்களை குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரத்து திருப்தி தரும். கோபத்தை குறைப்பது நல்லது. மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். மனகஷ்டம் தீரும்.

பரிகாரம்: சிவபெருமானை தினமும் 11 முறை வலம் வந்து வணங்க குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பண கஷ்டம் குறையும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: அக் 18, 19, 20, நவம் 15, 16
அதிர்ஷ்ட தினங்கள்: அக் 28, 29.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விருச்சிகம்: ஐப்பசி மாத ராசி பலன்கள் 2022