Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீனம்: மார்கழி மாத ராசி பலன்கள்

Advertiesment
மீனம்: மார்கழி மாத ராசி பலன்கள்
, புதன், 16 டிசம்பர் 2020 (15:26 IST)
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) - கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய ஸ்தானத்தில் ராஹூ  - பாக்கிய ஸ்தானத்தில்  கேது, சுக்ரன்   - தொழில்  ஸ்தானத்தில் சனி, சூர்யன், புதன், சந்திரன் - லாப ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:
 
26-12-20 அன்று காலை 5.22 மணிக்கு சனி பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
30-12-20 அன்று இரவு 2.22 மணிக்கு புதன் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
06-01-21 அன்று காலை 07.18 மணிக்கு சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
 
இந்த மாதம் எல்லா வகையிலும் நன்மை உண்டாக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்து மதிப்பு கிடைக்க பெறுவீர்கள். உடல் உழைப்பை அதிகரிக்க செய்யும்.  குறிக்கோளற்ற பயணங்கள் உண்டாகும். விழிப்புடன் இருப்பது நல்லது. சுப செலவுகள் உண்டாகும். கையிருப்பு கரையும். ஆன்மீக யாத்திரைகள் சென்று வருவீர்கள். 
 
குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன்முகம்  கொடுத்து பேசுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள்  நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். பிள்ளைகள் விரும்பியதை வாங்கிக் கொடுப்பீர்கள். 
 
தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் சுமூகமாக செல்வது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதில்  தாமதம் ஏற்படும். வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும்
 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மேலிடத்திலிருந்து உங்களுக்கு பொறுப்புகளை அதிகரிக்கலாம். பணி நிமித்தமாக வெளியூர் சென்று தங்க வேண்டி வரலாம்.  
 
பெண்களுக்கு எந்த முயற்சியிலும் சாதகமான  பலன் கிடைப்பதில் தாமதமாகும். மனகவலை ஏற்படலாம். உடல்நலனைப் பொறுத்தமட்டில் உஷ்ண சம்பந்தமான  நோய் உண்டாகலாம்.
 
மாணவர்களுக்கு கவன தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் கூடும்.
 
கலைத்துறையினருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்தும் திரும்ப கிடைக்கும்.
 
அரசியலில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். ஆனாலும் எதிலும் எச்சரிக்கையாக பேசுவது நல்லது. 
 
பூரட்டாதி:
இந்த மாதம் அனுபவபூர்வமான அறிவுதிறன் கூடும். குடும்பத்தில் இருப்பவர்களுடன்  அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும்.  
 
உத்திரட்டாதி:
இந்த மாதம் மற்றவர்கள்  உதவி கிடைப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். சொத்து விவகாரங்களில் காரிய தடை தாமதம், வீண் அலைச்சல் ஏற்படலாம். எதிலும் கூடுதல் கவனம் தேவை. திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
 
ரேவதி:
இந்த மாதம் முக்கியநபர்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்க பெறலாம். பணவரத்து அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். நன்மை  தீமைகளை பற்றி கவலைப் படாமல் எதிலும் துணிச்சலான முடிவு எடுப்பீர்கள்.
 
பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கும். மன நிம்மதி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 7, 8
அதிர்ஷ்ட தினங்கள்: ஜனவரி 1, 2.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கும்பம்: மார்கழி மாத ராசி பலன்கள்