Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீனம்: கார்த்திகை மாத ராசி பலன்கள் 2021

Advertiesment
மீனம்: கார்த்திகை மாத ராசி பலன்கள் 2021
, வியாழன், 18 நவம்பர் 2021 (18:48 IST)
(பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) - மன உறுதியுடன்  இருக்கும் மீன ராசியினரே நீங்கள் ஆன்மீகத்தில் அதிக நாட்டம்  கொண்டவர்.  இந்த மாதம் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். எதிர்ப்புகள் நீங்கும். புதிய தொடர்புகளை உண்டாக்கும்.


பெண்கள் மூலம் நன்மை உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். விருந்து  நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பலவகையிலும் வருமானம் வரும். சிலர் புதிய வீடு கட்டும் பணி தொடங்குவார்கள்.  
 
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, தேடி வரும். கனவு தொல்லை  உண்டாகலாம். நீண்ட நேரம் கண் விழிக்க நேரிடும். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை.  சகோதரர் வழியில் மனவருத்தம் உண்டாகலாம். திடீரென்று  கவனம் தடுமாறலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையான உழைப்பிற்கு பின்  நல்ல பலன் பெறுவார்கள், போட்டிகள் விலகும். 
 
குடும்பத்தினர் மூலம் உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும்.  மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பதன் மூலம் கல்வியில் வெற்றி உண்டாகும்.  அரசியல்வாதிகள் உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கலைத்துறையினருக்கு உங்கள் செல்வாக்கு உயரும். 
 
பூரட்டாதி 4:
தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக் கூடும். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.
 
உத்திரட்டாதி:
குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவி ஒருவருக் கொருவர்  புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை  உண்டாகும். புத்திசாதூரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். 
 
ரேவதி:
பொருளாதார சிக்கல் ஏற்பட்டு நீங்கும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள். அதனால் மதிப்பு கூடும். எதிர்ப்புகளை  சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
 
பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட தடை நீங்கி காரியம் நடக்கும். எதிலும் வெற்றி கிடைக்கும்.  
சந்திராஷ்டம தினங்கள்: டிசம் 1, 2, 3
அதிர்ஷ்ட தினங்கள்:  டிசம் 12, 13.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கும்பம்: கார்த்திகை மாத ராசி பலன்கள் 2021