Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிம்மம்: கார்த்திகை மாத ராசி பலன்கள்

சிம்மம்: கார்த்திகை மாத ராசி பலன்கள்
, திங்கள், 18 நவம்பர் 2019 (12:25 IST)
கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில்  புதன், செவ்வாய் -  சுக  ஸ்தானத்தில்  சூர்யன்,  சுக்ரன்  -  பஞ்சம ஸ்தானத்தில்  குரு, சனி, கேது   -   லாப ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன. 
பலன்: ராசியின் பெயருக்கேற்ப சிங்கதிற்கே உரிதான கம்பீரமான் தோற்றம் கொண்ட சிம்ம ராசி அனபர்களே! இந்த மாதம் குடும்பத்தில்  மகிழ்ச்சி பொங்கும். பணம் எதிர்பார்த்த அளவுக்கு வந்து கொண்டிருக்கும். உங்களின் முயற்சிகளைச் செம்மைப் படுத்தி காரியங்களை ஆற்றி  வெற்றி பெறுவீர்கள். புதிய சேமிப்புத் திட்டங்களிலும் ஈடுபடுவீர்கள். சிலர் புதிய வீடு வாங்கி கிரகப் பிரவேசம் செய்வார்கள். 
 
உங்களின் அசாத்திய துணிச்சலால் செயற்கரிய சாதனைகளைச் செய்வீர்கள். மறக்க முடியாத விதத்தில் அரசு வழியில் சில சலுகைகள்  கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை நிலவிவரும். வேலை நிமித்தமாக வெளியூர் பயணங்கள் ஏற்படக்கூடும். தனியார்  நிறுவனத்தில் பணியாற்றுவோரும் சம்பள உயர்வுகள் போன்ற சலுகைகள் பெற்று மகிழ்ச்சியடைக்கூடும். சிலர் வேலையில் இருந்து கொண்டே  தொழில் ஒன்றைத் தொடங்கி உபரி வருமானத்துக்கு வகை செய்து கொள்வீர்கள்.
 
தொழிலில் உங்களுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு தொடர்ந்துநல்லமுறையில் இருந்து வரும். நீங்கள் தரமான பொருள்களை விநியோகம் செய்து வருவதன் காரணமாக புதிய வாடிக்கையாளர்களும் உங்களை நாடி வருவார்கள்.
 
உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவோடு, எதிர் ப்பார்த்த இடமாற்றம் , பதவி உயர்வு போன்ற நற்பலன்களை எளிதில் பெற்று  மகிழ்வீர்கள். மனநிறைவு பெறும் வகையில் மறைமுக வருமானங்கள் பெருகும். சிலர் விருப்ப ஓய்வின் மூல உத்தியோகத்திலிருந்துவிலகி  தொழிலிலோ, வியாபாரத்திலோ ஈடுபட முனையக்கூடும்.
    
கலைத்துறையினருக்கு வாய்ப்புகளைத் தேடி நீங்கள் பலரைச் சந்திக்கச் சென்ற நிலை மாறி வாய்ப்பு தரும் நோக்கில் பல முன்னனி  நிறுவனங்கள் தாமே உங்களைத் தேடி வந்து வாய்ப்பு கொடுக்கும் நிலை உண்டு. உங்கள் திறமைகள் முழுவதையும் வெளிப்படுத்தி  ரசிகர்களின் அபிமானத்தையும் ஆதரவையும் பெருவாரியாகப் பெறுவாரியாகப் பெறுவீர்கள்.
 
அரசியல்வாதிகளுக்கு உங்கள் தன்னலமற்ற தொண்டுக்குப் பாரட்டுகள் குவியும். தலைமையின் நன்மதிப்பையும்  தொண்டர்களின்பெரும் ஆதரவையும் பெற்றுள்ள  உங்கள் செல்வாக்கும்  சொல்வாக்கும்  உங்களூக்குத் தனி மரியாதையைப் பெற்றுத் தரும்.பொருப்பான பதவிகள் சில   உங்கத்தேடிவரும்  உங்கள் பொருளாதார நிலையும் நல்ல முறையில் வளர்ச்சியடையும். வங்கிக்கணக்கில் சேமிப்பு பெருகும்.வீடு,மனை,  வண்டி,வாகன வசதிகளைக்  குறைவறப்பெற்றுக் களிப்பில் திளைப்பீர்கள்.
 
பெண்களுக்கு வீட்டுக்குத் தேவையான நவ நாகரிகப் பொருள்களை வாங்கி வீட்டை அழகுபடுத்துவீர்கள். புத்திர வழியில் மகிழ்ச்சிதரும்  நிகழ்ச்சிகள் நடைபெற இடமுண்டு. குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகவும் நிம்மதிக்காகவும் பெருமளவில் பாடுபடும் உங்கள் மீது  அனைவருமே அன்பு செலுத்த முன்வருவார்கள்.
 
மாணவர்களுக்கு கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெற்று , ஆசிரியர்களின் பராட்டுகளைப் பெறுவீர்கள். கல்விச் சலுகைகள் பெறக்கூடிய  வாய்ப்பு உண்டு. விளையாட்டு, போட்டிகள் போன்றவற்றிலும் பரிசுகளைப் பெற்று மகிழ்வீர்கள்.அயல் நாட்டுப் பயண வாய்ப்புகளும், உயர்  படிப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடும். படிப்பு முடிவடைவதற்கு  முன்னரே  சிலருக்கு வேலை வாய்ப்பு முன்வரக்கூடும்.
 
மகம்: இந்த மாதம் உங்கள் மனதில் பல்லாண்டுகாலமாகத் திட்டுமிட்டு  வந்தவை யாவும்  இப்போது நடைபெறக் காண்பீர்கள். பெரும்பாலும்  வீடு,மனைகளாகத்தான் அவை இருக்கும். ஏற்கனவே சொந்தவீட்டில்தான் இருக்கக்கூடுமாயினும் இப்போது மனைவியின் பெயரில் மேலும் ஒரு வீட்டை வாங்கக்கூடிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் காண்பீர்கள்.குடும்பத்தில் எந்த வகையிலும் குதூகலத்திற்குக் குறைவிராது.  எதிர்பாராத தனவரவுகள் சிலருக்கு உண்டு.
  
பூரம்: இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள் என்பதால் பணப் புழக்கத்தில் மிகத் திருப்திகரமான நிலை  காணப்படும். குடும்பத்தில் அனைவரின் தேவைகளையும் நிறைவேற்றி மகிழ்வித்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சியை மிகச்சிறப்பாக  நடத்தி வைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவீர்கள். பிரிந்து சென்ற உறவினர் திரும்பி வந்து சேருவார்கள். மற்றவர்களுக்கு பெருமளவில் உதவியும் செய்வீர்கள்.
 
உத்திரம் 1 ம் பாதம்: இந்த மாதம் உத்தியோகஸ்தர்கள் அலுவலக விஷயங்களில் பெரும் நற்பலன்களை எதிர்பார்க்கலாம் என்றாலும்  பணப்புழக்கம் உள்ள பணிகளில் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். அரசு வழியில் சில அனுகூலங்களை  எதிர்பார்க்கலாம். தேவையில்லாமல் கடன் வாங்குவதைத் தவிர்த்து விடுவது நல்லது. வியாபாரத்தில் பெரும் முன்னேற்றம் உண்டாக இட  முண்டு என்பதால் அதைக் கொண்டு விரிவுபடுத்தினால் போதுமானது. 
 
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவன் கோவிலை 11 முறை வலம் வரவும். பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்குவதும் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும். சமூகத்தில் அந்தஸ்து அதிகாரம் கிடைக்க பெறும்.  “ஓம் நமசிவய” என்ற மந்திரத்தை தினமும் 9  முறை சொல்லவும். 
 
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - புதன்
சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 6, 7
அதிர்ஷ்ட தினங்கள்: நவம்பர் 29, 30.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடகம்: கார்த்திகை மாத ராசிப் பலன்கள்