Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடகம் - கார்த்திகை மாத ராசி பலன்கள்

Advertiesment
கடகம் - கார்த்திகை மாத ராசி பலன்கள்

K.‌P. Vidyadaran

, சனி, 15 நவம்பர் 2014 (14:42 IST)
முடியாததை முடித்துக் காட்டுபவர்களே! உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். தடைகள் நீங்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். சகோதரங்கள் பக்கபலமாக இருப்பார்கள். திடீர் பணவரவு உண்டு. சிலருக்கு ஷேர் மூலாகவும் பணம் வரும். உங்கள் ராசிக்கு 3&ம் வீட்டிலேயே ராகு நிற்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடிப்பீர்கள். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள்.

வடக்கு, மேற்கு மாநிலத்தை சேர்தவர்களாலும் உங்கள் வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். 6&ந் தேதி வரை சுக்ரன் சாதகமாக இருப்பதால் குழந்தை பாக்யம் உண்டு. வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். ஆனால் 7&ந் தேதி முதல் சக்ரன் 6&ல் சென்று மறைவதால் மனைவிக்கு அலைச்சலும், ஆரோக்ய குறைவும், வீண் சந்தேகத்தால் சண்டை, சச்சரவும் ஏற்படக்கூடும். கவனமாக இருங்கள். விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உங்கள் தனாதிபதி சூரியன் 5&வது வீட்டில் நிற்பதால் முன்கோபம் அதிகமாகும். எல்லோரும் தன்னைப் பயன்படுத்திக் கொண்டு பிறகு தூக்கி எறிகிறார்கள் என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள்.

உடல் உஷ்ணம் அதிகமாகும். அடிவயிற்றில் வலி வந்துப் போகும். சின்ன சின்ன வேனல் கட்டியும் வரக்கூடும். எனவே காரமான உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஜென்ம குரு நடைபெறுவதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருக்கும். மனக்குழப்பங்களும், எதிர்மறை எண்ணங்களும் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறை அதிகமாகும். உங்களுடைய ராசிக்கு 4&ல் சனி நிற்பதால் சோர்வு, களைப்பு வந்து நீங்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும். ஆசை வார்த்தைக் கூறி சிலர் உங்களை ஏமாற்றுவதற்கு வாய்ப்பிருக்கிறது. கவனமாக இருங்கள். கன்னிப் பெண்களே! மாதத்தின் முற்பகுதி நன்றாக இருக்கும்.

இறுதிப் பகுதியில் காதலில் பிரச்னைகள், பெற்றோருடன் மோதல்கள், சிறுசிறு விபத்துகள் வந்துப் போகும். புது முயற்சிகளையும் தவிர்ப்பது நல்லது.  வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். யாருக்கும் கடன் தர வேண்டாம். பழைய நண்பர்கள், உறவினர்களாக இருந்தாலும் வியாபார வகையில் சலுகைகள் தர வேண்டாம். உத்தியோகத்தில் எதிர்ப்புக் குறையும். எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும்.

இடமாற்றமும் நீங்கள் எதிர்பார்த்தபடி அமையும். தொந்தரவு கொடுத்த அதிகாரி மாறுவார். நல்லவர் மேலதிகாரியாக வருவார். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினரே! சின்ன வாய்ப்பாக இருந்தாலும் உதாசீனப்படுத்தாமல் பயன்படுத்திக் கொள்ளப்பாருங்கள். ஆரோக்யத்திலும், குடும்ப ஒற்றுமையிலும் கவனம் செலுத்த வேண்டிய மாதமிது. 

Share this Story:

Follow Webdunia tamil