Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விருச்சிகம் - கார்த்திகை மாத ராசி பலன்கள்

விருச்சிகம் - கார்த்திகை மாத ராசி பலன்கள்
, சனி, 15 நவம்பர் 2014 (14:28 IST)
கொள்கை, கோட்பாடுகளை விட்டுக் கொடுக்காதவர்களே! உங்கள் ராசிநாதன் செவ்வாய் 22&ந் தேதி முதல் உச்சம் பெற்று 3&ம் வீட்டில் அமர்வதால் உங்களுடைய முயற்சிகளெல்லாம் பலிதமாகும். உங்களுடைய ராசியையும், ராசிநாதனையும் குருபகவான் பார்ப்பதால் வி.ஐ.பி அந்தஸ்திற்கு உயர்வீர்கள். பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்வீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். வழக்குகள் சாதகமாகும். இழுபறியாக இருந்து வந்த வேலைகள் நல்ல விதத்தில் முடியும். வேலையும் குறையும்.

உங்களுடைய ஆளுமைத் திறனும், நிர்வாகத்திறனும் அதிகரிக்கும். சகோதரருக்கு திருமணம் செய்து வைப்பீர்கள். புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். கடந்த ஒரு மாதமாக 12&ல் மறைந்து உங்களுக்கு செலவினங்களையும், அலைச்சலையும், தூக்கமின்மையையும் தந்த சூரியன் இப்போது உங்கள் ராசிக்குள் நுழைந்திருக்கிறார். அதனால் நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். பயம் விலகும். ஆனால் ராசிக்குள் சூரியன் நிற்பதால் உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி வந்து நீங்கும். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள்.

வாகனத்தை சீர் செய்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். கணவன்&மனைவிக்குள் நெருக்கம் உண்டு. மகனுக்கு இருந்து வந்த சோர்வு, களைப்பு நீங்கும். அவர் பொறுப்பாக செயல்படத் தொடங்குவார். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் வெளிமாநிலத்தில், அயல்நாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. முன்கோபம் குறையும். உங்கள் தன&பூர்வ புண்யாதிபதி குருபகவான் வலுவாக நிற்பதால் பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி உயரும். உங்கள் பிள்ளைகள் உயர்கல்விக்காகவோ, உத்தியோகத்திற்காகவோ அயல்நாடு செல்வார்கள். ஏழரைச் சனி நடைபெறுவதால் அவ்வப்போது தூக்கம் குறையும். செலவுகள் அதிகமாகும்.

கொஞ்சம் கடன் தலைத்தூக்கும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். கன்னிப் பெண்களே! நட்பு வட்டம் விரியும். உயர்கல்வியில் முன்னேறுவீர்கள். சகோதரர்களுடன் இருந்த பகைமை நீங்கும். காதல் விவகாரத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. லாப வீட்டிலேயே ராகு நிற்பதால் வேற்றுமொழிப் பேசுபவர்கள், வேற்றுமதத்தாருடன் கூட்டு சேரக் கூடிய அமைப்பு உருவாகும்.

வழக்கறிஞர் அல்லது ஆடிட்டரை வைத்துக் கொண்டு முறைப்படி கூட்டுத் தொழிலுக்கான பத்திரத்தில் கையெப்பமிட்டு பின்னர் கூட்டுத் தொழிலில் ஈடுபடுவது நல்லது. வேலையாட்களின் முரட்டுப் பிடிவாதம் நீங்கும். உத்தியோகத்தில் செல்வாக்குக் கூடும். அதிகாரிகள் பக்கபலமாக இருப்பார்கள். புது வேலைக் கிடைக்கும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். இயக்கம், சங்கம் இவற்றில் பெரிய பதவிகள் தேடி வரும். கலைத்துறையினரே! புதிய வாய்ப்புகளால் உற்சாகமடைவீர்கள். சம்பளம் உயரும். உதவும் குணத்தாலும், ராஜ தந்திரத்தாலும் மதிப்பு, மரியாதைக் கூடும் மாதமிது.

Share this Story:

Follow Webdunia tamil