Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கன்னி - கார்த்திகை மாத ராசி பலன்கள்

கன்னி - கார்த்திகை மாத ராசி பலன்கள்

K.‌P. Vidyadaran

, சனி, 15 நவம்பர் 2014 (14:34 IST)
கற்றது கை மண்ணளவு என்பதை அறிந்தவர்களே! உங்களுடைய ராசிநாதன் புதன் இந்த மாதம் முழுக்க சாதகமான வீடுகளிலும், சாதகமான நட்சத்திரங்களிலும் சென்றுக் கொண்டிருப்பதால் உங்களுடைய செல்வாக்குக் கூடும். எங்குச் சென்றாலும் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வீரியத்தை விட காரியம் தான் முக்கியம் என்பதை உணருவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். திருமணமும் கூடி வரும். ஆனால் உங்களுடைய ராசியிலேயே ராகு நிற்பதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். நல்ல வாய்ப்புகளையெல்லாம் இழந்துவிட்டோமே என்று அவ்வப் போது வருத்தப்படுவீர்கள்.

ஒருசிலர் உங்களைப் பயன்படுத்திக் கொண்டு பிறகு உதாசீனப்படுத்தி ஒதுக்கித் தள்ளினார்களே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். லேசாக தலைச்சுற்றல், பித்த மயக்கம் வந்துப் போகும். ஏழரைச் சனி நடைபெறுவதால் நடக்கும் போது காலில் அடிப்பட வாய்ப்பிருக்கிறது. மூச்சுப் பிடிப்பு, மூச்சு திணறல் வந்துப் போகும். மறதியால் விலை உயர்ந்த ஆபரணங்களை இழந்துவிடாதீர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தோல்விமனப்பான்மை, தாழ்வுமனப்பான்மை நீங்கும். சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் உருவாகும்.

சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை கண்டறிவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். புது வீடு வாங்கும் அமைப்பு உண்டாகும். வங்கிக் கடன் வசதியும் கிடைக்கும். பழைய கடனை பைசல் செய்ய வழி பிறக்கும். உங்கள் ராசிக்கு 2&ல் அமர்ந்து உங்களை கடுமையாகப் பேச வைத்த, கோபப்பட வைத்த சூரியன் இப்போது 3&ம் வீட்டில் நுழைந்திருப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

கன்னிப் பெண்களே! பெற்றோருடன் மோதிக் கொண்டிருக்காதீர்கள். திடீரென்று அறிமுகமாகுபவரை நம்பி பழைய நண்பர்களை இழந்துவிடாதீர்கள். நேர்முகத் தேர்வு, பொதுத் தேர்வு எழுதிவிட்டு காத்திருப்பவர்களுக்கு வேலைக் கிடைக்கும். நல்ல வரன் அமையும். வியாபாரம் தழைக்கும். பற்ற வரவு உயரும். பழைய சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரம் சம்பந்தபட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பழைய பாக்கிகளையும் இங்கிதமாகப் பேசி வசூலிப்பீர்கள்.

ஏமாற்றிக் கொண்டிருக்கும், ஏனோ, தானோ என்று வேலைப் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையாட்களை நீக்கிவிட்டு அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கிருந்து வந்த தர்ம சங்கடமான சூழ்நிலைகளெல்லாம் மாறும். சக ஊழியர்கள் உங்களை ஆதரிப்பார்கள். மூத்த அதிகாரியின் மாற்றான் தாய் மனப்போக்கு மாறும். மேற்கொண்டு படித்து கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் மாதமிது.  

Share this Story:

Follow Webdunia tamil