Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கன்னி - ஐப்பசி மாத ராசி பலன்கள்

கன்னி - ஐப்பசி மாத ராசி பலன்கள்

K.‌P. Vidyadaran

, வியாழன், 16 அக்டோபர் 2014 (14:48 IST)
சுற்றி வளைக்காமல் எடுத்த எடுப்பிலேயே தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தும் நீங்கள் வெகுளிகள். உங்களுடைய ராசிக்கு லாப வீட்டில் குரு நிற்பதால் பிரச்னைகளை சமாளிக்கும் சக்தி கிடைக்கும். நல்லவர்கள் அறிமுகமாவார்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்துக் கொள்ள வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் வந்தமையும். மறைமுக எதிர்ப்புகளையும் சமாளிப்பீர்கள்.

அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. மூத்த சகோதரங்கள் பக்கபலமாக இருப்பார்கள். அண்டை மாநிலம், வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரவு உண்டு. உங்களுடைய ராசியிலேயே ராகு நிற்பதால் அவ்வப்போது தலைச்சுற்றல் வரும். கழுத்து வலி, முதுகு வலி வரும். மனஇறுக்கத்துடன் சில நேரங்களில் காணப்படுவீர்கள்.

ஏழரைச்சனியில் பாதச் சனி நடைபெறுவதால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரச்னைகளும், போராட்டங்களும் இருந்துக் கொண்டேயிருக்கும். அடிமனதில் ஒருவித பயம் வந்துப் போகும். அவ்வப்போது தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்கள் உங்களை சரியாக மதிக்கவில்லையென்றெல்லாம் ஆதங்கப்பட்டுக் கொள்வீர்கள்.

20-ந் தேதி முதல் உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்ரன் தனஸ்தானத்தில் ஆட்சிப் பெற்று அமர்வதாலும் 2-ந் தேதி முதல் உங்கள் ராசிநாதன் புதன் சுக்ரனுடன் சென்று சேர்வதாலும் பணவரவு உண்டு. மனைவியின் ஆதரவுக் கிடைக்கும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேரும் வாய்ப்பு உண்டாகும். ஆனாலும் பல் வலி, தொண்டை புகைச்சல், சளித் தொந்தரவு வந்துப் போகும். வாகனத்தை அதிக வேகமாக இயக்க வேண்டாம். 4-ம் வீட்டில் செவ்வாய் நிற்பதால் யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திடாதீர்கள். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். உறவினர், நண்பர்களுக்காக ஓடி ஓடி உழைத்தும் நன்றி மறந்தவர்களாக இருக்கிறார்களே என்றெல்லாம் வருத்தப்பட்டுக் கொள்வீர்கள்.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் மூக்கை நுழைக்காதீர்கள். அன்பாக பேசிபவர்களையெல்லாம் நல்லவர்கள் என்று நினைத்து ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் கடந்த மாதத்தை விட இந்த மாதம் பற்று வரவு உயரும். பழைய பிரச்னைகளும் தீரும். உணவு, எரிபொருள், வாகனம், கட்டுமானப் பொருட்களால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுடைய ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். கலைத்துறையினரே! நழுவிச் சென்ற வாய்ப்புகள் கூடி வரும். வருமானம் உயரும். திடீர் திருப்பங்களும், யோகங்களும் நிறைந்த மாதமிது. 

Share this Story:

Follow Webdunia tamil