Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விருச்சிகம் - ஐப்பசி மாத ராசி பலன்கள்

விருச்சிகம் - ஐப்பசி மாத ராசி பலன்கள்

K.‌P. Vidyadaran

, வியாழன், 16 அக்டோபர் 2014 (14:44 IST)
மனக் கோட்டை கட்டும் நீங்கள், ஒரு போதும் பணக் கோட்டைக்கு அடிமையாக மாட்டீர்கள். உங்கள் ராசியை குரு பார்த்துக் கொண்டிருப்பதால் பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறை மூலமாக தீர்வு காண்பீர்கள். வளைந்துக் கொடுத்துப் போவதால் சில காரியங்களை சாதிப்பீர்கள். மனதில் பட்டதையெல்லாம் பேசி கெட்ட பெயர் வாங்குவதை விட அளவாகக் குறைவாக பேச வேண்டும் என்ற முடிவிற்கு நீங்கள் வருவீர்கள்.

எல்லோரையும் நம்பி ஏமாறுவதை விட அளவாக மற்றவர்களிடம் பழகுவது நல்லது என்று யோசிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி உண்டு. பணவரவு அதிகரிக்கும். பிரபலங்கள் பக்கபலமாக இருப்பார்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நல்ல விதத்தில் முடிப்பீர்கள். ஏழரைச் சனி நடைபெறுவதாலும், யோகாதிபதி சூரியன் 12-ல் மறைந்திருப்பதாலும் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். பழைய கடனை நினைத்து ஒருவித அச்சம் வந்துப் போகும்.

அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளையும் உடனுக்குடன் செலுத்துவது நல்லது. வழக்குகளில் கவனம் தேவை. உங்களுடைய ராசிக்கு சாதகமாக சுக்ரனும், புதனும் செல்வதால் சிக்கல்களை எதிர்கொண்டு அதை தீர்க்கும் மனப்பக்குவம் உண்டாகும். மகளுக்கு திருமணம் கூடி வரும். மகனுக்கிருந்து வந்த கூடாப்பழக்க வழக்கங்கள் விலகும். 5-ல் கேது நிற்பதால் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். கன்னிப் பெண்களே! போட்டித் தேர்வு, நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.

வேலைக் கிடைக்கும். காதல் சம்பந்தப்பட்ட குழப்பங்கள் நீங்கும். அரசியல்வாதிகளே! தொகுதி மக்களிடையே செல்வாக்குக் கூடும். புது பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் ஈட்டுவீர்கள். உணவு, எலக்ட்ரானிக்ஸ், பிளாஸ்டிக், வாகன உதிரி பாகங்கள், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலைப் பார்க்க வேண்டி வரும்.

சிலருக்கு இடமாற்றம் உண்டு. சுக்ரனும், குருவும் சாதகமாக இருப்பதால் சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவீர்கள். கலைத்துறையினரே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். மாறுபட்ட அணுகுமுறையாலும், பிரபலங்களின் நட்பாலும் முன்னேறும் மாதமிது. 

Share this Story:

Follow Webdunia tamil