Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கும்பம் - ஐப்பசி மாத ராசி பலன்கள்

கும்பம் - ஐப்பசி மாத ராசி பலன்கள்
, வியாழன், 16 அக்டோபர் 2014 (14:37 IST)
ஈரப் பார்வையால் எல்லோரையும் தன் வசம் ஈர்க்கும் ஆற்றல் கொண்ட நீங்கள் எப்போதும் இதயத்தால் பேசுவீர்கள். குரு 6-ல் மறைந்திருப்பதால் செலவிகளும், அலைச்சல்களும், திடீர் பயணங்களும் இருந்துக் கொண்டேயிருக்கும். உங்களைப் பற்றிய வதந்திகளும் அதிகமாகும்.

யதார்த்தமாக நீங்கள் பேசுவதை சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். எனவே வெளிப்படையான விமர்சனங்களை நீங்கள் தவிர்ப்பது நல்லது. சுற்றியிருப்பவர்களில் யாரை நம்புவது, யாரை தவிர்ப்பது என்பது புரியாமல் தவிப்பீர்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது பயம் வந்து நீங்கும். சுக்ரன் 20-ந் தேதி முதல் 9-ம் வீட்டிற்குள் ஆட்சிப் பெற்று அமர்வதால் பணவரவு உண்டு. கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். சூரியனும், சனியும் 9-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும். அவருடன் மனத்தாங்கலும் வரும். புதன் சாதகமாக இருப்பதால் பழைய நண்பர்கள், உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். உங்கள் ராசிநாதன் சனி பகைக் கோளுடன் சேர்ந்திருப்பதால் அலர்ஜி, இன்பெக்ஷன், காது வலி, பல் வலி வந்துப் போகும்.

வகுப்பறையில் அரட்டைப் பேச்சை தவிர்ப்பது நல்லது. கன்னிப் பெண்களே! புதிய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். காதல் விவகாரத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கள். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். செவ்வாய் 11-ம் வீட்டில் நிற்பதால் சகோதரங்கள் வியாபாரத்தை விரிவுப்படுத்த பக்கபலமாக இருப்பார்கள்.

ரியல் எஸ்டேட், கன்ஸ்ட்ரக்ஷன், ஹோட்டல், துணி, வாகன வகைகளால் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். தொல்லைக் கொடுத்து வந்த அதிகாரி மாறுவார். உங்களை ஆதரிப்பவர் அதிகாரியாய் வருவார். கலைத்துறையினரே! முடங்கிக் கிடந்த பட வேலைகள் விறுவிறுப்பாகி உங்களுடைய படைப்புகள் வெளியாகும். நட்பு வட்டத்தாலும், நிதானப் போக்காலும் ஒருபடி உயரும் மாதமிது.  

Share this Story:

Follow Webdunia tamil