Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மிதுனம்: பங்குனி மாத ராசி பலன்கள் 2021

Advertiesment
மிதுனம்: பங்குனி மாத ராசி பலன்கள் 2021
, திங்கள், 15 மார்ச் 2021 (15:48 IST)
(மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்) - எப்போதும் சுறுசுறுப்பாக செயலாற்றும் மிதுன ராசியினரே நீங்கள் சுய கௌரவம் பார்ப்பீர்கள். நிதானமாக எந்த முடிவையும் எடுப்பீர்கள். இந்த மாதம் பணவரத்து மனமகிழ்ச்சியை தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும்.


மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். சுக்கிரன் சஞ்சாரத்தால் வாக்கு வன்மையால் நன்மையை தரும். நோய்  நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
 
தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு, வீண் அலைச்சல் குறையும். எதிர்பார்த்த அதிகாரம் அந்தஸ்து  கிடைக்கும். சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள்.
 
குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகள் மூலம்  மனமகிழ்ச்சி ஏற்படும்.  அதே நேரத்தில் அவர்களால் செலவும் வரும். 
 
பெண்களுக்கு உங்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுகட்டைகள் அகலும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கையில் காசு புரளும்.
 
கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம். மற்றவர்களை திருப்தியடையச் செய்யும் வகையில் உங்களது செயல்கள் இருக்கும். டெக்னிக்கல்  சார்ந்த துறையினருக்கு தொட்டதெல்லாம் துலங்கும்.
 
அரசியல் துறையினருக்கு முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை  அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.  விருப்பங்கள்  கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம். ராசியாதிபதி புதன் ராகுவுக்கு கேந்திரம் பெறுவதால்  மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.
 
மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் நீங்கும். எதிர்காலம் பற்றிய திட்டம் தோன்றும். ஆசிரியர்களின் உதவி கிடைக்கும்.
 
மிருகசீரிடம் - 3, 4: இந்த மாதம் தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம்  நன்மை உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. 
 
திருவாதிரை: இந்த மாதம் புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். 
 
புனர்பூசம் - 1, 2, 3: இந்த மாதம் மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி  திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை.
 
சந்திராஷ்டம தினங்கள்: ஏப்ரல் 6, 7
அதிர்ஷ்ட தினங்கள்: மார்ச் 30, 31
பரிகாரம்: ஸ்ரீநரசிம்மரை தீபம் ஏற்றி தரிசித்து வர கடன் பிரச்சனை குறையும். வீண் அலைச்சல் மனோபயம் குறையும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரிஷபம்: பங்குனி மாத ராசி பலன்கள் 2021