Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடகம்: ஆவணி மாத ராசி பலன்கள்

Advertiesment
கடகம்: ஆவணி மாத ராசி பலன்கள்
, திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (15:37 IST)
(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) - கிரகநிலை: ராசியில் சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  புதன், சூர்யன் - ரண, ருண ஸ்தானத்தில்  கேது, குரு (வ), சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ, சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
 
 
பலன்: உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் கடக ராசியினரே நீங்கள் குடும்பத்தினரை நேசிப்பவர்கள். இந்த மாதம் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும்.  மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். பணவரத்தை அதிகப்படுத்தும்.
 
அரசியல்துறையினருக்கு எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மன கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும்.
மாணவர்களுக்கு மனதில் இருந்த வீண் பயம் அகலும். கல்வியில் வெற்றி பெற பாடுபடுவீர்கள்.
 
புனர்பூசம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் மெத்தனபோக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம்.
 
பூசம்:
இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும், திட்டமிட்டதை விட கூடுதல் செலவும் இருக்கும்.  பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி கூறுவது படி நடந்து கொள்வது நன்மை தரும். நிலுவையில்  உள்ள பணம் வரலாம்.
 
ஆயில்யம்:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் உண்டாகலாம். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும், வாழ்க்கை துணையின்  ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே  இருந்த மனகசப்பு மாறும்.
 
பரிகாரம்: அருகில் இருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வணங்கி வர குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாள் பிரச்சனை தீரும்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி; 
சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 1, 2, 3
அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 26, 27.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மிதுனம்: ஆவணி மாத ராசி பலன்கள்