Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மேஷம் - தை மாத ராசி பலன்கள் 2020

Advertiesment
மேஷம் - தை மாத ராசி பலன்கள் 2020
(அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்) - கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில்  ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் -  அஷ்டம  ஸ்தானத்தில்  செவ்வாய் -   பாக்கிய ஸ்தானத்தில் குரு, சனி, கேது - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன் - லாப ஸ்தானத்தில் சுக்ரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.  
கிரகமாற்றங்கள்:
 
28-01-2020 அன்று மாலை 3.12 மணிக்கு புதன் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
04-02-2020 அன்று மாலை 6.36 மணிக்கு சுக்கிர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
10-02-2020 அன்று காலை 5.13 மணிக்கு  செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
 
தீவிரமாக முயற்சி செய்து காரியத்தை நடத்தும் மேஷ ராசியினரே, இந்த மாதம் முயற்சிகள் அனைத்தும் வேகம் பெறும்.  எதையும்  சரியாக  கணித்துச் சொல்வதில் வல்லவராக இருப்பீர்கள். பணவரத்து உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும். சேமிப்பும்  அதிகமாகும். மற்றவர்களுக்காக உதவி செய்யும் போது  அவர்களின் தேவை அறிந்து செய்வது நல்லது. உடல் சோர்வும் ஏற்படலாம். கவனம்  தேவை.
 
குடும்பத்தில் இதுவரை இருந்த கருத்து வேறுபாடுகள் மாறும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். கணவன் - மனைவி இடையே இருந்த  மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். உடல்நலத்தைப் பொறுத்தவரை  மூட்டு சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். உடற்பயிற்சியால் அதனை தவிர்க்கலாம். கவனம் தேவை.
 
தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். பணவரத்து எதிர்பார்த்த அளவு கிடைத்து தேவை பூர்த்தியாகும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கான  வாய்ப்புகள் கண்முன் தோன்றும். 
 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைவால் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். சக ஊழியர்கள் ஆதரவுடன் எடுத்துக் கொண்ட  காரியங்கள் சுமூகமாக முடியும். 
 
கலைத்துறையினருக்கு வாக்கு வன்மையால் சில வாய்ப்புகள் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். துறையில் உயர்ந்தவர்களிடம் புதிய  ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பணிகள் தொடர்பான பயணங்கள்  செல்ல நேரலாம். புத்தி சாதூரியத்தால் கொடுத்த வேலையை சிறப்பாக  செய்து முடிப்பீர்கள்.
 
அரசியல் துறையினர் எடுக்கக் கூடிய ஒப்பந்தகளை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.  லாபம் பெருகும். மேலிடத்தின் கனிவான பார்வை கிடைக்கப் பெறுவீர்கள்.
 
பெண்களுக்கு காரியங்களில் முன்னேற்றம் இருக்கும். மற்றவர்களிடம் தேவையில்லாத வாக்கு வாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. 
மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பதில் மெத்தனம் காணப்படும். கல்வியில் வேகம் காட்டுவது வெற்றிக்கு நல்லது.
 
அஸ்வினி:
 
இந்த மாதம் குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மாற்று கருத்துக்களை  மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். மாணவர்கள் எதையும் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசித்து செய்வது நன்மை தரும்.  கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். கணவன்,  மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். உறவினர்களுடன் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது.
 
பரணி:
 
இந்த மாதம் புதிய முயற்சிகளை தள்ளி போடுவதும் கவனமாக காரியங்களை செய்வதும் நல்லது. மன குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.  வீண் அலைச்சல் குறையும். சிக்கல்கள் தீரும். எண்ணிய காரியம் கைகூடும் குறிக்கோள் நிறைவேறும். குடும்ப உறவினர்களால் வீண்  அலைச்சல் உண்டாகலாம் கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் மிகவும்  கவனமாக தங்களது வேலைகளை செய்வது நல்லது.
 
கார்த்திகை 1ம் பாதம்:
 
இந்த மாதம் சமூகத்தில் அந்தஸ்து உண்டாகும்.  தொழில் வியாபாரத்தில் மாற்றம் செய்ய எண்ணுவீர்கள். சிலர் புதிய தொழில் தொடங்க  முற்படுவார்கள். கவனமாக செயல்படுவது நல்லது.  வாடிக்கையாளர்களின் தேவைகளை சமாளித்து விடுவீர்கள். உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் உண்டாகும். பெண்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும். மன  வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
 
பரிகாரம்: முருகனை வணங்கி வர பல நாட்களாக இழுபறியான காரியம் வெற்றிகரமாக முடியும். மனக்கவலை நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - புதன்
சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 20, 21
அதிர்ஷ்ட தினங்கள்: ஜனவரி 15; பிப்ரவரி 10, 11.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (17-01-2020)!