Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேஷம்: புரட்டாசி மாத ராசி பலன்கள்

மேஷம்: புரட்டாசி மாத ராசி பலன்கள்
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) - கலையார்வம் மிக்க மேஷ ராசியினரே உங்களுக்கு எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும்  திறமையும் இருக்கும். 
இந்த மாதம் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தின் மூலம் வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும்.  உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும்.  நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும்.
 
தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த  மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள்.
 
குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சனைகள் நீங்கி அமைதி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக் கசப்பு மாறும். விருந்தினர்கள்  வருகை இருக்கும். குடும்ப செலவுகள் குறையும். பிள்ளைகள் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை  செய்து கொடுப்பீர்கள்.
 
பெண்களுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான கவலைகள் நீங்கும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும்.
 
பரிகாரம்: ஸ்ரீமகாகணபதியை பூஜித்து வழிபட்டு வர எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். காரிய தடைகள் நீங்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவபெருமானை இந்த தானியங்களை கொண்டு வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்...!!