Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மேஷம்: புரட்டாசி மாத ராசி பலன்கள்

Advertiesment
மேஷம்: புரட்டாசி மாத ராசி பலன்கள்
, வியாழன், 20 செப்டம்பர் 2018 (13:08 IST)
(அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்) கிரக நிலைகள்: செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான் ரண, ருண,ரோக சத்ரு ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.

அக்டோபர் 3 ந்தேதி ரண, ருண,ரோக சத்ரு ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான்  களத்திரஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு களத்திரஸ்தானத்தில் இருந்த குருபகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி  ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி களத்திரஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.
 
பலன்: உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும்.
 
குடும்பத்தில் சந்தோஷம் குடி கொண்டிருக்கும். இம்மாத குருபெயர்ச்சிக்குப் பிறகு குருபகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமான தனம், குடும்பம், வாக்கு ஸ்தானத்தை பார்ப்பதால் குடும்பத்தில் இருந்த இன்னல்கள் மறையும். பனிரெண்டாம் இடமாகிய விரய ஸ்தானத்தைப் பார்ப்பதால் சுபவிரயங்கள் உண்டாகலாம்.
 
தொழில் ஸ்தானத்தில்முக்கிய முடிவுகள் எடுக்கும் போது பங்குதாரர்களை அனுசரித்து செல்வது மிக அவசியம். அவர்களே உங்கள் வழிக்கு வர தயாராக  இருப்பார்கள்.
 
உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் அதிகமாக உழைக்க வேண்டி வரலாம். சக பணியாளர்கள் பொறாமையில் உங்களை எறிச்சலடையச் செய்வார்கள்.  பொறுமையைக் கையாளுங்கள்.
 
பெண்கள் உங்கள் சிந்தனை ஒன்று செயல் ஒன்றாக இருக்கும். செய்யும் வேலையில் கவனமாக இருக்கவும். மாணவர்கள் ஆசிரியரின் நன்மதிப்பை பெறுவீர்கள். கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.
 
கலைத்துறையினருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கைநழுவி போகலாம். மற்றவர்கள் பாராட்டுக்கு மயங்கி எந்தவொரு நிகழ்விலும் நிதானத்தை இழக்க வேண்டாம். கடன்கள் கட்டுக்குள் இருக்கும்.
 
அரசியல் வாதிகளுக்கு  கிடைக்க வேண்டிய பதவி, பொறுப்புகள் உங்களையே வந்தடையும். எதிர்பார்த்த ஒவ்வொரு விசயங்களிலும் நன்மையே கிட்டும். எதிரிகளைவிட உடனிருப்போரிடம் கவனம் வையுங்கள். குலதெய்வத்தை வழிபட்டு காரியங்களை வெற்றியுடன் நடத்தி வாருங்கள்.
 
அஸ்வினி: இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். யாரிடமும் எதிர்த்து பேசி விரோதத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரிவு நீங்கி ஒன்று சேர்வார்கள். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய எண்ணம் மேலோங்கும்.
 
பரணி: இந்த மாதம் சோர்வில்லாமல் எப்போதும் உற்சாகமாக காணப்படுவீர்கள். உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். நற்பெயரும்  புகழும் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க நேரலாம். எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் சமாளித்துவிடும்  திறமை இருக்கும்.
 
கார்த்திகை 1ம் பாதம்: இந்த மாதம் எந்த செயலையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் வீண் அலைச்சல் உண்டாகலாம்.  மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கஷ்டமான பாடங்களையும் மனம் துவளாமல் படிப்பீர்கள்.
 
பரிகாரம்: சனிக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும்.  சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 17; அக்டோபர் 12, 13, 14. அதிர்ஷ்ட தினங்கள்: அக்டோபர் 6, 7. அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நெற்றியில் திருநீறு வைப்பதால் கிடைக்கும் பலன்கள்...!