Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேஷம்: ஆடி மாத ராசி பலன்கள்

மேஷம்: ஆடி மாத ராசி பலன்கள்
, புதன், 17 ஜூலை 2019 (11:32 IST)
அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம் - கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன் (வ), சுக்ரன், ராஹூ - சுகஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன் - அஷ்டம ஸ்தானத்தில்  குரு (வ)  - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ), கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம்  வருகின்றன.
பலன்:
 
இந்த மாதம் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். சுப செலவுகள் ஏற்படும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.  திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன  யோகம் உண்டாகும்.
 
தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள்  கிடைக்கும்.
 
குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி  குறையும். குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும்.  மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். உங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.
 
பெண்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.
 
அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது அவசியம். கட்சித் தலைமையின் அன்புக்கு  பாத்திரமாவீர்கள்.
 
கலைத்துறையினர் யதார்த்தமான படைப்புகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள். வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவார்கள்.  சம்பளப் பாக்கி கைக்கு வரும்.
 
மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை குறையும். அதிக மதிப்பெண் எடுக்க ஆர்வமாக படிப்பீர்கள்.
 
அஸ்வினி: இந்த மாதம்  பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் உண்டாகும். திருமணம்  தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும். வீடு, வாகனம் வாங்குவது அல்லது புதுப்பிப்பதில் நாட்டம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தை  திறமையாக செய்து முடிப்பீர்கள்.
 
பரணி: இந்த மாதம் பண புழக்கம் திருப்தி தரும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை நீங்கும். பாடங்கள்  படிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பாராட்டு கிடைக்கலாம். எனினும் வீண் அலைச்சல், தடை, தாமதம் உண்டாகும்.
 
கார்த்திகை 1ம் பாதம்: இந்த மாதம் காரியங்கள் தடைபட்டாலும் பின்னர் நன்றாக நடந்து முடியும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். பணம் வரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் ஆர்டர்  கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும், தொழில் வியாபாரம் சீராக நடக்கும்.
 
பரிகாரம்: செவ்வாய்கிழமையில் நவகிரகத்தில் செவ்வாய அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வணங்குவது வாழ்வில் முன்னேற்றத்தை தரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்டு 9, 10
அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்டு 3, 4.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (17-07-2019)!