Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மேஷம்: ஐப்பசி மாத ராசி பலன்கள்

Advertiesment
மேஷம்: ஐப்பசி மாத ராசி பலன்கள்
கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய ஸ்தானத்தில் ராஹூ -   ரண, ருண ஸ்தானத்தில்   செவ்வாய் -  களத்திர  ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ),  சுக்ரன்  -  அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி, கேது  என கிரகங்கள் வலம்  வருகின்றன. 
கிரகமாற்றங்கள்:
 
29-Oct-19 அன்று காலை 3.49 மணிக்கு குரு பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
29-Oct-19 அன்று  இரவு 7.22 மணிக்கு சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
11-Dec-19 அன்று  மாலை 6.21 மணிக்கு செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
 
பலன்:
 
துடிதுடிப்புடன் எடுத்த வேலைகளை செய்யும் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் தடைபட்டிருந்த அனைத்து காரியங்களும் அடுத்தடுத்து  நடைபெறப் போகிறது.
 
குடும்பத்தில் நீங்கள் படும் கஷ்டம் வெளியே தெரியாது. நீங்கள் எப்போதுமே பிறர் கண்ணுக்கு சௌகரியமான வாழ்க்கை வாழும் ஆளாகத்  காட்சி தருவீர்கள். நீங்கள் யாரிடமும் உங்களது குறைகளைத் தெரிவித்துக் கொள்ள மாட்டீர்கள். வீட்டில் நடைபெற வேண்டிய சுபகாரியங்கள்  சுமூகமாக நடைபெறும். 
 
தொழிலில் நூதனப் பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும். வியாபாரம் அபிவிருத்தியாகும்.  பங்குதாரர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பது  நன்மை தரும். இல்லையெனில் நஷ்டம் ஏற்படவும் வாய்ப்புண்டு. வெளிவட்டார பழக்க வழக்கங்கள் அபிவிருத்தியைத் தரும்.
உத்தியோகஸ்தர்கள்  புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது. வேலையில் இருந்த  பளு கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். அதில் இருந்து வந்த சுணக்க நிலையும் மாறும். வெளிநாட்டு வேலை எதிர்பார்த்து  காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.
 
பெண்கள் எதிர் விளைவுகளை  முன்கூட்டியே யோசித்து வார்த்தைகளை எச்சரிக்கையாக விடுங்க. பக்குவமாகவும்,  இதமாகவும் பேசுவது  தான் உங்க நன்மைக்கு பக்க பலம். வெலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் தொழிலிடத்தில் ‘தான்’ என்ற அகங்காரம் தலை  தூக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது. 
 
கலைத்துறையினர் கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. பயணங்கள் செல்ல  நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன்  மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும்.
 
அரசியல் துறையினர் மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். மனதிற்க்குப்  பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம். பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப்  பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பினில் சாதனைகள் புரிவர். எதிர்நோக்கியிருக்கும்  சவால்களையும் முடிப்பீர்கள். சுற்றுலா சென்று வருவீர்கள்.
 
அஸ்வினி:
 
இந்த மாதம் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும்  சரியாகிவிடும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம். பிள்ளைகளுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும்.  உறவினர்களிடம் கவனம் தேவை.
 
பரணி:
 
இந்த மாதம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். மனதில் ஒருவித கவலை இருக்கும்.  மாணவர்களுக்கு தடைகளை தாண்டி கல்வியை கற்க செய்யும் முயற்சி வெற்றி பெறும். சிறப்பாக படித்து முடிப்பீர்கள். நீண்ட தூரப்  பயணங்களால் லாபம் உண்டாகும். மனதில் தைரியம் பிறக்கும். வாக்கு வன்மையால் ஆதாயத்தை பெறுவீர்கள். சிலருக்கு இட மாற்றம்  உண்டாகலாம். குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம்.
 
கார்த்திகை 1ம் பாதம்:
 
இந்த மாதம் வேலையில் இழுபறி, வீண் அலைச்சல் போன்றவை ஏற்பட்டு நீங்கும். கவனம் தேவை. எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய  வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடங்கல் ஏற்பட்டு நீங்கும்.  தேவையற்ற மனக்கவலை உண்டாகும். சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம். பெண்கள் அடுத்தவர்களுக்கு உதவிகள்  செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது.
 
பரிகாரம்:
 
திருச்செந்தூர் முருகனை வேண்டிக் கொள்ள அனைத்து காரியங்களும் தங்கு தடையின்றி நடைபெறும். சஷ்டி தோறும் அருகிலிருக்கும்  முருகனுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்
சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 30, 31
அதிர்ஷ்ட தினங்கள்: அக்டோபர் 24, 25.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (19-10-2019)!