Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கும்பம்: ஆனி மாத ராசி பலன்கள் 2021

Advertiesment
கும்பம்: ஆனி மாத ராசி பலன்கள் 2021
, செவ்வாய், 15 ஜூன் 2021 (18:04 IST)
(அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதங்கள்) கிரகநிலை: ராசியில்  குரு (அதி. சா)   - சுக  ஸ்தானத்தில் புதன், ராஹூ -  பஞ்சம  ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன் -  ரண ருண ரோக  ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் - தொழில்  ஸ்தானத்தில் கேது -  அயன சயன போக  ஸ்தானத்தில் சனி (வ) என கிரகங்கள்  வலம் வருகின்றன.

பலன்:
வாழ்க்கையில் மனிதர்களுக்கு முக்கியவத்துவம் அளிக்கும் கும்ப ராசியினரே நீங்கள் உதவிக்கரம் நீட்டுவதில் ஆர்வம் மிக்கவர். இந்த மாதம் சுபகாரியங்களில்  கலந்து கொள்ள நேரலாம். சனியின் பார்வை ராசியின் மீது பதிவதால் பணம் வரவு நன்றாக இருக்கும். இழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக்கூடும். தேவையற்ற கவலைகள் நீங்கும்.  உங்களை பற்றி விமர்சனம் செய்து வந்தவர்கள் அதனை விட்டு விடுவார்கள். வழக்குகளில் இருந்து வந்த தேக்க நிலை மாறும்.  எதிர்காலத்திற்கு தேவையான பணிகளை திட்டமிடுவீர்கள். 
 
தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். கடன் பிரச்சனை தீரும். ஆர்டர் பிடிப்பதில் இருந்த கஷ்டம் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள்.  மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
 
பாதியில் நின்ற வீடுகட்டும் பணியை மீண்டும் தொடருவீர்கள். சிலர் புதிய வீட்டிற்கு குடிபுகுவார்கள். கணவன் மனைவிக்கிடையில் திடீரென்று கருத்து வேற்றுமை  உண்டாகலாம். பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் அடைய தேவையான உதவிகளை செய்வீர்கள். வழக்குகளில் நல்ல தீர்ப்பு வரும்.
 
பெண்களுக்கு மற்றவர்களிடம் கவனமாக பேசுவது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில்  பங்கேற்கும் போது கவனம் தேவை. 
 
கலைத்துறையினருக்கு புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. வெளியூர்  வெளிநாடு செல்ல வேண்டி வரலாம்.
 
அரசியல் துறையினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். நட்பு வட்டாரத்தில் குதூகலம் ஏற்படும். 
 
அவிட்டம்:
இந்த மாதம் பிரிந்துசென்ற தம்பதியினர் ஒன்றுசேர்வார்கள். குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. மருத்துவத் தொழில்புரிவோருக்கு அதிக வருவாய் வரும் மாதம். சோதனைகள் வெற்றியாக மாறும்.
 
சதயம்:
இந்த மாதம் காரியங்கள் அனைத்தும் கைகூடும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். உல்லாசப் பயணங்களில் நாட்டம் செல்லும். மனஅடக்கம் பெற  தியானம் செய்யுங்கள். படிப்பில் நாட்டம் கூடும். பெற்றோர்கள், பிள்ளைகள் விரும்பியதை  வாங்கிக்கொடுப்பார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வந்துசேரும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வரும்.
 
பூரட்டாதி:
இந்த மாதம் கல்வியில் புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. செய்யும்  உத்தியோகத்தில் இடமாற்றமோ அல்லது பணி நிரந்தரமோ ஏற்படலாம்.
 
பரிகாரம்:  சனிக்கிழமையில் விஷ்ணு சகஸ்ர நாமம் படித்து பெருமாளை வழிபட எல்லா பிரச்சனைகளும் தீரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி; 
சந்திராஷ்டம தினங்கள்: ஜூன்: 18, 19; ஜூலை: 16
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூலை: 9, 10.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகரம்: ஆனி மாத ராசி பலன்கள் 2021