Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மிதுனம்: கார்த்திகை மாத ராசி பலன்கள்

Advertiesment
மிதுனம்: கார்த்திகை மாத ராசி பலன்கள்
, திங்கள், 18 நவம்பர் 2019 (12:08 IST)
கிரகநிலை: ராசியில் சந்திரன்,  ராஹூ -   பஞ்சம ஸ்தானத்தில் புதன், செவ்வாய் -  ரண, ருண ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன்  -   களத்திர  ஸ்தானத்தில்  குரு, சனி, கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்: பொதுவாக மிகவும் சாதுவான தோற்றத்தைக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே, வர்களான நீங்கள் பார்வைக்குத் தான் அப்படியே தவிர,  மற்றபடி அறிவுக்கூர்மையும் அன்புள்ளமும் செயலாற்றலும் மிக்கவர்கள்தான்.  இந்த மாதம் உழைப்பு கூடினாலும் அவற்றுக்கு இரட்டிப்பான  வருமானம் கிடைக்கும். புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். 
 
குடும்பத்தில் உங்களைச் சார்ந்திருப்பவர்களையும் உயர்த்தி விடுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கூட்டாளிகளும் நண்பர்களும்  உங்களுக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள். அதேநேரம் எவருக்கும் அவர்கள் கேட்காமல் அறிவுரைகள் கூற வேண்டாம். வாழ்க்கை சலிப்பு  தட்டிவிட்டது என்றிருந்தவர்களுக்கு அது மாறி நம்பிக்கை துளிர்விடும். 
 
தொழிலில் உங்கள் எதிரிகள் உங்களுக்குப் போட்டியாகக் கடுமையாக இயங்கக் கூடும் என்பதால் உங்கள் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் நீங்கள் புதுமையாக ஏதேனும் சலுகைகளை அறிவித்து அவர்களை உங்கள் பக்கமே தக்க வைத்துக் கொள்வதன் மூலம்  வியாபாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படாமல் குறைந்தபட்ச லாபத்துடன் நடைபெற்று வர வழிவகுக்கலாம்.  
 
உத்தியோகஸ்தர்களுக்கு உங்கள் பணிகளில் கவனக் குறைவு கூடாது.  சக பணியாளர்கள் உங்கள் மீது புகார் எழுப்பத் தயாராயிருப்பார்கள். மறைமுக வருமானங்களில் அதிக எச்சரிக்கை தேவை. நீங்கள் எதிர்பார்த்த்படி சிலருக்கு இடமாற்றங்கள் கிடைக்கக் கூடுமாயினும்  உங்களுக்குத் திருப்திதர முடியாதபடி கடுமையான வேலைப் பளு நிறைந்ததாக இருக்கக் கூடும். 
 
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் அமைவதற்குரிய நிலை சாதகமாக இல்லை என்றாலும் கடுமையாக உங்கள் முயற்சிகளைத்  தொடர்வது அவசியம். உங்கள் வசதிகளில் பெரும்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும் அளவில் சில வாய்ப்புகளை பெறக்கூடும்.  
அரசியல்வாதிகள் எதிலும் எப்போதும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய ஆண்டாக அமைகிறது. சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள்  கிடைத்தாலும் எதிரிகளின் கை ஓங்கியே காணப்படும். கட்சியில் உங்கள் மீது கண்டனத்தீர்மானம் நிறைவேற்றப்படலாம். வாயைக் கொடுத்து விவகாரத்தில் மாட்டிக்கொள்ள வேண்டாம். அதே நேரம் பயணங்களில் வெற்றியடைவீர்கள்.
 
பெண்களுக்கு  எதிலும் பொறுமையும், நிதானமும் தேவை. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றி மறையும்.  உடல் நலத்தில் அக்கறை  தேவை.  கருவுற்ற பெண்களுக்கு கவனம் தேவை. கோபத்தைக் குறைத்துக் கொள்வதும் நன்மைகளுக்கு வழிவகுக்கும். யாரிடமும்  தேவையில்லாத பேச்சுகளை பேச வேண்டாம்.
 
மாணவர்களுக்கு விளையாட்டை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது.சிலர் படிப்பை நிறுத்தி விட்டு உத்தியோக  வாய்ப்புகளைப் பெறவும் முயலக் கூடும். விளையாடும் போதும் வாகனங்களிலும் கவனம் தேவை. 
 
மிருகசீரிஷம் 3,4 ஆம் பாதங்கள்:  இந்த மாதம் எந்தப் பிரச்சனையும் எளிதில் முடியாமல் தாமதம் ஆகக் கூடும் என்பதற்காக நீங்கள் அவசரப்  படாதீர்கள். இறைவழிபாடு, தியானம்  போன்றவற்றில் மனத்தைச் செலுத்துவது நல்லது. சிலர் விருதுகள், பாராட்டுகள் போன்றவற்றை பெற வாய்ப்புண்டு. பக்குவமாகச் சமாளிப்பது அவசியம். உடல்நலத்தில் அக்கறை செலுத்துங்கள்.பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகள் இருப்பவர்கள்  சாதகமான தீர்ப்பைப் பெறுவது சாத்தியமாகும்.
 
திருவாதிரை:  இந்த மாதம் தொழில் , வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளவர்கள் குறைந்த பட்ச ஆதாயத்தைப் பெறக்கூடும்.  நஷ்டம்  பற்றிக் கவலைப்படாதீர்கள். அதற்கு வாய்ப்பு இல்லை. உறவினரின் ஒத்துழைப்பை எல்லாம் பெருமளவில் எதிர்பார்ப்பதற்கில்லை.  பணம்  கொடுக்கல், வாங்கலில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். பிறமொழி பேசும் ஒருவரால் நன்மை உண்டாகும். தொழில்  முயற்சிகளில் கவனம் தேவை.
 
புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்: இந்த மாதம் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள்.  வேலை தேடிக் கொண்டிருந்தவர்களில் சிலருக்கு இப்போது  நல்லதொரு வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். பெரும்பாலானவர்களுக்கு இனம் புரியாத தேவையற்ற மனக்கலக்கம் ஏற்பட்டு  நிவர்த்தியாகும். வீட்டில் சுபநிகழ்ச்சி தள்ளிப்போகலாம். கடன் கிடைக்குமாயினும் வாங்காமலேயே சமாளிப்பது பிற்காலத்திற்கு உதவியாக அமையும். ஜாமீன் கையெழுத்துபோட்டு கடன் வாங்கித் தர முயற்சிக்காதீர்கள்.
 
சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 1, 2
அதிர்ஷ்ட தினங்கள்: நவம்பர் 24, 25.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரிஷபம்: கார்த்திகை மாத ராசி பலன்கள்