Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மிதுனம்: ஐப்பசி மாத ராசி பலன்கள்

Advertiesment
மிதுனம்: ஐப்பசி மாத ராசி பலன்கள்
, சனி, 19 அக்டோபர் 2019 (13:36 IST)
கிரகநிலை: ராசியில்  ராஹூ -  சுக ஸ்தானத்தில்   செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ),  சுக்ரன்  -  ரண, ருண  ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சனி, கேது -   அயன, சயன, போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரகமாற்றங்கள்:
 
29-Oct-19 அன்று காலை 3.49 மணிக்கு குரு பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
29-Oct-19 அன்று  இரவு 7.22 மணிக்கு சுக்கிர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
11-Dec-19 அன்று  மாலை 6.21 மணிக்கு செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
 
பலன்:
 
உடன் பிறந்தோருக்காக உழைக்கத் தயாராகும் மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் கொடுக்கல் வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும்.  வரவேண்டிய பணபாக்கிகள் வசூலாகும். 
 
குடும்பத்தில் உங்களது யோசனைகளை மற்றவர்கள் கேட்டும் அனுசரித்தும் செல்வார்கள். உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் மீண்டும் திரும்பி  வருவார்கள். எதையும் ஆலோசனை செய்து முடிவெடுங்கள். தெய்வ நம்பிக்கைகளிலும் சடங்குகள் சமம்பிரதாயங்களில் நாட்டம் அதிகரிக்கும்.
 
தொழிலில் புதிய குத்தகைகளில் லாபம் கொட்டும். பால் வியாபாரத்தாலும், கால்நடைகளாலும் நன்மை உண்டாகும். நிலம் சம்பந்தப்பட்ட  வழக்குகள், உங்களுக்குச் சாதகமாக முடியும்.  வங்கிகளிடமிருந்து கடன் கிடைக்கும். நீர் வரத்து நன்றாக இருப்பதால் விவசாயத்தில்  உற்சாகமாக ஈடுபடுவீர்கள்.
 
உத்தியோகஸ்தர்கள் தூர தேசம் பயணம் எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு வேலை உத்தரவாதம் கிடைக்கவிருக்கிறது. வேலை வாய்ப்பினை  எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு தகுந்த வேலை கிடைக்கும். வேலை வாய்ப்பினை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு தகுந்த வேலை  கிடைக்கும். 
 
பெண்கள் தாய் மற்றும் தாய் வழி உறவினர்களால் மூலம் பாசம் அன்பு பெறுவீர்கள்.  அழகிய பெரிய வீடும் மற்றும் விலை உயர்ந்த  வாகனமும் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். செல்வாக்கு உயரும். சொன்ன சொல்லை செயலாக்கி காட்டுவீர்கள்.
 
கலைத்துறையினருக்கு தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு  வந்தால் தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும்  வாய்ப்புகள் உண்டு.
 
அரசியல் துறையினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும்.  செல்வாக்கு ஓங்கும். நட்பு வட்டாரத்தில் குதூகலம் ஏற்படும். மாணவர்களுக்கு தேர்வில் நல்ல தேர்ச்சி கிடைக்கும். கனவுகளில் நேரத்தை  செலவிடாதீர்கள். புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவீர்கள்.
 
மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
 
இந்த மாதம் எல்லா கஷ்டங்களும் நீங்கும். பொருளாதார மேம்பாடு உண்டாகும். பணவரத்து சீராக இருக்கும். வேலை பளு காரணமாக நேரம்  தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும். கை, கால் வலி, உடல் சோர்வு உண்டாகலாம்.  தொழில், வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். தொழில் தொடர்பாக அமைய வேண்டி இருக்கும். குடும்பத்தில் நீண்டநாட்களாக  இருக்கும் பிரச்சனை தீரும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.
 
திருவாதிரை:
 
இந்த மாதம் அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் ஏற்பட்டு சரியாகும். கவுரவம் பாதிக்கும்படியான சூழ்நிலை வரலாம். தொழில்  வியாபாரத்தில் பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். சகோதரர்களிடம் கவனமாக பேசி  பழகுவது நல்லது. பிள்ளைகளால் டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்கள் மற்றவர்கள் நலனை  அக்கறையுடன் கவனிப்பீர்கள். செலவுகள் அதிகரிக்கும். வீண் அலைச்சல் உண்டாகும்.
 
புனர்பூசம் 1, 2, 3 பாதம்:
 
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். இயந்திரங்கள்,  ஆயுதங்கள், நெருப்பு ஆகியவற்றை கையாளும் தொழிலாளர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர்  பிரச்சனைகள் அதனால் வாக்குவாதம் போன்றவை உண்டாகும். பெண்கள் பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்களில்  சாதகமான பலன் பெறுவீர்கள்.
 
பரிகாரம்:
 
ஸ்ரீ மஹாவிஷ்ணுவை பூஜித்து துளசி மாலை சாற்றி வழிபட்டு ஏழைகளுக்கு உதவி செய்து வாருங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி
சந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 4, 5 
அதிர்ஷ்ட தினங்கள்: அக்டோபர் 28, 29.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரிஷபம்: ஐப்பசி மாத ராசி பலன்கள்