மன நோயாளி: டாக்டர் நான் செத்துப் போயிட்டேன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டேங்கறாங்க
டாக்டர்: (பளார் என்று அடித்து விட்டு): இப்ப கத்தினயே நீ உயிரோட இருக்கேன்னு இப்பவாவது நம்புரியா இல்லையா?
மன நோயாளி: ஏன் சார் செத்தவனுக்கு வலிக்காதா? யார் சொன்னா? நன் செத்துட்டேன்... செத்துட்டேன்!
டாக்டர்: (மெடிகல் புத்தகங்களை வைத்து): இதோ பார் செத்தவன் உடம்புலேர்ந்து ரத்தம் வர்றாதுன்னு பெரிய டாக்டர்ங்கள்ளாம் எழுதியிருக்காங்க பாரு!
மன நோயாளி: ஆமாம் டாக்டர் கரெக்ட்; செத்தவன் உடம்புலேயிருந்து ரத்தம் வராது.
(டாக்டர் ஒரு கொறடை எடுத்து மன நோயாளியின் விரலை துண்டிக்கிறார்.)
டாக்டர்: இப்ப என்ன சொல்ற? உனக்கு ரத்தம் வர்றது பாரு. இதுலேர்ந்து உனக்கு என்ன புரியுது?
மன நோயாளி: செத்தவன் உடம்புலேர்ந்து ரத்தம் வரும்னு தெரியுது. உங்க புக்லதான் தப்பா போட்டுருக்காங்க.