நண்பன்: என்னடா.. உன் பக்கத்து வீட்டுக்காரன் தன்னோட கோழியை உன் வீட்டு நிலத்தில் மேயவிடுறான்னு சொல்லி புலம்பினியே.. இப்போ எப்படி இருக்கு?
கோபி : கோழியா.. எங்க நிலத்துப் பக்கம் கூட வர்றதில்ல.
நண்பன் : அப்படி என்ன செஞ்ச?
கோபி : ஆறு முட்டைகளை கடையில் வாங்கி வந்து புதருக்கு அடியில் வைச்சிட்டு மறுநாள் அவன் பார்க்கும்போது முட்டைகளை நான் எடுத்தேன்.