Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கிரிக்கெட் ஜோக்ஸ்

Advertiesment
கிரிக்கெட் ஜோக்ஸ்
, வெள்ளி, 6 ஜனவரி 2012 (16:01 IST)
1. என்னப்பா இந்த சேவாக் டிவி-யை போடறதுக்கு முன்னாலேயே அவுட் ஆயிடறார்?

இது பரவாயில்லை போன இன்னிங்ஸ்ல இறங்கறதுக்கு முன்னாலயே அவுட் ஆயிட்டார்னா பாத்துக்கயேன்.


2. தோனி: பீ கேர் ஃபுல் அடுத்த டெஸ்ட்ல ஜெயிச்சு...

கிளார்க்: என்ன சொன்னீங்க?

தோனி: நான் உங்களச் சொன்னேன்!


3. நிருபர்: உள்நாட்டுல பயங்கரமா ஆடி சூரப்புலி கணக்கா இருக்கீங்க? வெளிநாட்டுலன்னா பதுங்கற பூனையாயிடறீங்களே ஏன்?

தோனி: உள்நாட்டுல ஜெயிக்கறதுனாலதான இப்படி கேக்கறீங்க, இனிமே உள்நாட்டுலையும் தோத்து நாங்க யார்னு உங்களுக்கு கூடிய விரைவில் நிரூபிக்கிறோம்!


4. தோனி: இங்கிலாந்துல ஒரு 11 பேர் கூட்டிட்டுப் போயி கும்கும்முனு கும்மினாங்க, அடுத்து ஆஸ்ட்ரேலியாகாரன் அவங்க ஊருக்கு கூட்டிட்டு போயி மாறி மாறி டயர்ட் ஆக வரைக்கும் அடிச்சாங்க...

"இவ்வளவு அடி வாங்கினீங்களே உங்களுக்கு கோபமே வரலியா?

"அங்கதான் என்ன "கேப்டன் கூல்"னு சொல்லி அடக்கிட்டாங்களே...


5. சச்சின் டெண்டுல்கர் 100வது செஞ்சுரியை எப்பத்தான் அடிப்பாரு?

100வது வயசுல 100வது சதம் எடுக்கறது ஒரு சாதனைன்னு அவர் கிட்ட யாராவது சொல்லித் தொலைச்சுட்டாங்களோ என்னவோ!



6. நிருபர்: எதிர் அணி பேட்ஸ்மென்களை நீங்க ரொம்ப சுலபமா ரன் எடுக்க அனுமதிக்கிறீங்கன்னு உங்க மேல ஒரு குற்றச்சாட்டு இருக்கே?

தோனி: அவங்கதான் சின்னப்பிள்ளத் தனமா நம்ம பேட்ஸ்மென்களுக்கு ரன் தர பிடிவாதம் பிடிக்கறாங்கன்னா நம்மளும் அப்படியா இருக்கறது, அப்பறம் அவங்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?

7. தோனியிடம் அணி மேலாளர்: தோனி! சச்சின், லஷ்மண் அவுட் ஆயிட்டாங்க!

தோனி: என்னடா லஞ்ச் முடிஞ்சுடுச்சே இன்னும் எதுவும் நடக்கலையேன்னு பார்த்தேன்!


8. கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா: தோனி! நீங்க செய்யறது உங்களுக்கே நியாயமா இருக்கா?

தோனி: நீங்க ஜெயிக்கறா மாதிரிதானே விளையாடறேன்?

கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா: பாண்டிங், ஹஸ்ஸியையெல்லாம் நாங்க தூக்கறதாயிருந்தோம் இப்ப நீங்க ரன் எடுக்க விட்டுட்டீங்க!

தோனி: அது உங்களுக்கு நல்லதுதானே!

கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா: மண்ணாங்கட்டி! கிரெக் சாப்பல், ரிச்சி பெனோ, ஆலன் பார்டர், கிம் ஹியூஸ் எல்லாரும் நானும் தயாராத்தான் இருக்கேன் எனக்கும் வாய்ப்பு கொடுங்கன்னு கேட்டு தொந்தரவு பண்றாங்க அதுக்குக் காரணம் நீங்கதான?


9. தோனி: டாஸ் ஜெயிச்சு பேட்டிங் செஞ்சேன்; 191ரன்னுக்கு ஆல் அவுட் ஆனா நான் என்ன செய்ய முடியும்?

மேலாளர்: அவங்கள முதலில் பேட் செய்யச் சொல்லவேண்டியதான?

தோனி: அவங்க 191 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தா நாம ஜெயிக்கற மாதிரி வந்துடும். ஜெயிக்கறதுனாலே பசங்க ரொம்ப பயப்படறாங்க!

10: என்ன சார் இது ரோஹித் ஷர்மாவை உக்கார வச்சுட்டு கோலியை விளையாட வைக்கிறீங்க, அவருக்கு பேட்டிங் வரல்லியே சார்!

தோனி: எனக்கு மட்டும் வருதா என்ன? அதையெல்லாம் பார்த்தா முடியுமா பாஸ்!

Share this Story:

Follow Webdunia tamil