Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடல்ட்ஸ் ஒன்லி!

Advertiesment
ஏ ஜோக்
, திங்கள், 4 பிப்ரவரி 2013 (17:40 IST)
FILE
ஒரு இளம் பெண் ஒரு மருத்துவருடன் நீண்ட நாட்கள் பழகுகிறாள். உறவு நெருக்கமாகிறது. அந்தப் பெண் கர்ப்பமாகிறாள். இருவருக்கும் இது மிகவும் எரிச்சலைக் கொடுத்தது. அபார்ஷன் செய்ய அந்தப் பெண் ஒப்புக் கொள்ளவில்லை.

மாதங்கள் ஓடுகிறது. அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறக்கும் நேரம், மருத்துவமனையில் டெலிவரிக்காக அதே டாக்டரின் மருத்துவமனையில் சேர்கிறாள்.

அதே நேரத்தில் நடுத்தர வயது ஆண் ஒருவர் வயற்றில் பெரிய கட்டி காரணமாக அனுமதிக்கப்படுகிறார். அவருக்கும் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது.

அப்போது அந்த மருத்துவர் ஒரு ஐடியா செய்கிறார். அந்தப் பெண்ணிடம் சென்று உனக்கு முதலில் ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியே எடுத்து விடுவோம், பிறகு அந்த ஆள் அடிமிட் ஆனானே அவன் கிட்ட போய் சார் ஒரு அதிசயம் உங்கள் கட்டியை ஆபரேஷன் செய்தபோது உங்களுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது என்போம்!

அதற்கு அந்த பெண். அந்த ஆள் நம்புவானா? எதுக்கும் டிரை பண்ணி பார்க்கலாம் என்றார் டாக்டர்.

அந்தப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அடுத்ததாக அந்த மற்றொரு நபரின் வயிற்றுக் கட்டி அறுவை சிகிச்சையும் செய்து முடித்த டாக்டர். அவர் மயக்கம் தெளிந்தவுடன்: "சார்! ஒரு பெரிய அதிசயம் நடந்திருக்கு! உங்களுக்கு குழந்தை பிறந்திருக்கு உங்க வயித்துலேர்ந்துதான் எடுத்தோம்"!

அந்த நபர் உடனே காச்சு மூச்சு என்று கத்த ஆரம்பித்தார். இது நடக்க முடியாத காரியம் யார் கிட்ட?

டாக்டர்: நான் ஆபரேஷன் செஞ்சேன் அவ்வளவுதான் இதோ உங்க குழந்தை! என்றார்.

15 ஆண்டுகள் ஓடி மறைந்தது. அந்த வயிற்றுக்கட்டி நபர் தன் மகனிடம் உண்மையை கூற வேண்டும் என்று நினைத்து அவனை அழைக்கிறார்!

'மகனே நான் உனக்கு அப்பா இல்ல!"

என்னப்பா சொல்றீங்க? நீங்க என் அப்பா இல்லையா?

ஆமாம்பா! நான் உன் அம்மா! உன்னோட அப்பா ஒரு டாக்டர்தான்!

webdunia
FILE
மனைவியின் ஆதிக்கத்தில் இருந்து இருந்து சலித்த ஒரு நபர் ஒரு மனநோய் நிபுணரிடம் செல்கிறார். தன் பிரச்சனையைக் கூறுகிறார்!

மன நோய் நிபுணர் கூறுகிறார்: உங்களுக்கு சுயமரியாதை தேவை. என்று புத்தகம் ஒன்றை அவர் கையில் கொடுத்து இதனை வீட்டிற்கு போவதற்குள் படித்து முடித்டு விடுங்கல் பிறகு பாருங்கள் உங்கள் வேலையை என்றார்.

வீடு வருவதற்குள் புத்தகத்தை முடித்த அந்த நபர் மிகவும் தெம்பாக உணர்ந்தார்.

நுழைந்தவுடன் தன் மனைவியிடம் கையை நீட்டி ஆக்ரோஷாமாக, "இன்னிலேர்ந்து நாந்தான் இந்த வீட்டு ஆம்பள ஜாக்கிஅத! நான் வச்சதுதான் சட்டம்! இன்னிக்கு நைட் நீ எனக்கு விருந்து சமையல் செய்யணும், வடை பாயாசம், அப்பளம்... ஒரு ஐட்டம் மிஸ் ஆகக் கூடாது, ஆச்சு தொலச்சுப்புடுவேண் தொலச்சு..! அதக்கப்புறம் நைட் படுக்கறதுக்கு முன்னாடி நான் வென்னீர்ல குளிக்கணும், குளிப்பாட்டி விடப்போறது நீ.
குளிச்சவுடனே யார் எனக்கு டிரஸ் போட்டு விட்டு தலையை வாரி விடப்போறா சொல்லு பார்ப்போம்?"

மனைவி: யாரு? அந்தச் சுடுகாட்டு வெட்டியானா?

கணவன் மனைவிக்குள் பயங்கர சண்டை!

மனைவி: நேத்து நைட் தூக்கத்துல நீங்க ஆஷா, ஆஷான்னு உளறித் தள்ளினீங்க. எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும் யார் அந்த ஆஷான்னு!

கணவன்: அது ஒண்ணுமில்ல, போன வாரம் ரேசுக்கு போனப்ப ஒரு குதிரை மேல பணம் கட்டினேன் அந்தக் குதிரை மூலமா 5000 ரூபா சம்பாதிச்சேன் அந்த குதிரையோட பேர் ஆஷா!

கணவனின் பதிலில் அரைகுறை திருப்தி அடைந்த மனைவி விஷயத்தை சந்தேகத்துடன் அப்போதைக்கு விட்டுவிட்டாள். அவனும் வேலைக்குச் சென்றான். மீண்டும் மாலை வீடு திரும்பும்போது... மனைவி மீண்டும் சண்டை போடும் மூடில் பேசத் தொடங்கினாள்

கணவன்: ஏன்? என்ன இப்ப? எதுக்கு ூஞ்சிய காமிக்கற?

மனைவி: உங்க குதிரை ஆஷா போன் பண்ணி பேசிச்சு!

கணவன்: ?!?!?!

Share this Story:

Follow Webdunia tamil