Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிட்ச் பற்றி நான் கூறியதை சீரியசாக எடுத்துக் கொள்வதா? - தோனி பேட்டி (கற்பனை)

Advertiesment
தோனி
, திங்கள், 26 நவம்பர் 2012 (12:50 IST)
FILE
எப்போதும் இந்தியா தோல்வியடைந்தால் நம் கேப்டன் தோனி அருமையான ஒரு சப்பைக் கட்டு பேட்டி கொடுப்பார். தோல்விக்கு அலாதியான காரணங்களை அவர் கூறுவார். இந்த முறை ஊடகங்களின் கேள்விக்கணைகளை தோனி எதிர்கொள்ள தமிழ் வெப்துனியா அவருக்கு உதவுகிறது. இப்படி தோனி பதில் கூறினால் இனிமேல் செய்தியாள்ர்கள் பக்கத்தில் வருவார்களா என்ன?
---------------

என்ன இங்கிலாந்து ஜெய்க்கும்னு எதிர்பார்த்திருக்க மாட்டீங்க இல்ல?

" யா, வின்னின் இஸ் இம்பார்டெண்ட்" அதுக்காக நாம தோக்கணும்னு அர்த்தமில்ல. பிட்ச் பத்தி நான் சொன்னத ஏன் சீரியசா எடுத்துக்கிட்டாங்கன்னே தெரியல. முதல் பந்துலேர்ந்து பந்து திரும்பணும்னு சொன்னது உண்மைதான் அதுக்காக இங்கிலாந்து ஸ்பின்னருக்கு திரும்பணும்னு நான் சொன்னேனா?

டாஸ் பத்தி ஏதோ சொன்னீங்க போல இருக்கே?

இந்தியால டாஸ் ஜெயிக்கற டீம் மேட்சையும் ஜெய்ச்சிரும்னு தப்பு தப்பா பேசிக்கிட்டு இருந்தத நான் கேட்டிருக்கேன். அதனால்தான் அந்த சமன்பாட்டை உடைக்க டாஸ் ஜெயிச்ச டீம் உதை வாங்கும்கற என்னோட தியரிய நிரூபிக்க வேண்டியதாப் போயிடுச்சு!

எங்க தப்பு நடந்துதுன்னு நீங்க நினைக்கிறீங்க?

ஓஜா, ஜாகீர் கான், ஹர்பஜன் இவங்கள்லாம் குறைஞ்சது 70, 80 ரன்னாவது தனிப்பட்ட முறையில் எடுக்கணும். இவங்களோட பேட்டிங் எனக்கு கொஞ்சம் கூட திருப்திதரல்ல. யுவ்ராஜ், புஜாரா, சேவாக், கம்பீர் பவுலிங்ல இன்னும் இம்ப்ரூவ் செய்யணும்!

புஜாரா ஆட்டம் பத்தி என்ன நினைக்கிறீங்க?

அவரை யார் முதல் இன்னிங்ஸ்ல சீப்பா 135 ரன்ல அவுட் ஆகச் சொன்னது? இரண்டாவது இன்னிங்ஸ்ல அவர் விக்கெட்டை நானா எடுத்தேன். இருந்தாலும் அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கு. இரண்டு இன்னிங்ஸ்களிலும் 200 ரன்கள் எடுக்க அவர் முயல வேண்டும். பிறகு அவர் ஒற்றை பரிமாண வீரராக இருக்கிறார். ஜாகீர் கான், ஓஜா, அஷ்வின், ஹர்பஜன் சரியாக வீசாத போது புஜாரா ஓரிரண்டு விக்கெட்டுகளை எடுத்திருந்தால் தட் உட் ஹாவ் பீன் அ டிபரண்ட் பால் கேம்!

யுவ்ராஜ் சிங் ஏமாற்றம்தான் தோல்விக்கு காரணமா?

யார் சொன்னது? யுவ்ராஜ் சிங் பவுலிங் சரியா போடல்ல அவ்வளவுதான் ஒரு மேட்ச் அப்படி இப்படித்தான் இருக்கும். அவர் பேட்டிங் பத்தி நான் கவலையே படலை. கேன்சர்லேர்ந்து வெளியே வந்துருக்காரு. எப்படியும் ஒரு 10 வருஷம் சான்ஸ் கொடுத்தா நிச்சயம் அவர் இம்ப்ரூவ் ஆயிடுவார்னு நினைக்கிறேன்.

சேவாக் பவுலிங் பத்தாது! சச்சின் டெண்டுல்கர் கிரேட் பிளேயர் நிச்சயம் அடுத்த இங்கிலாந்து தொடருக்குள்ள அவர் பார்முக்கு வந்துடுவார் நாம் பொறுமையாத்தான் இருக்கணும்.

இந்தியன் ஸ்பின்னர்களுக்கு பந்து திரும்பவே இல்லையே?

அதுல எனக்கு ஒண்ணும் ஆச்சரியமில்ல, உங்களுக்கு ஆச்சரியமா இருந்தா நான் என்ன செய்ய முடியும்? நீங்க டிவியை பார்க்கும்போது கொஞ்சம் ஓரமா நின்னு பார்க்கணும், அப்ப தெரியும் பந்து திரும்பறது! நாம பார்வையை கொஞ்சம் மாத்திக்கணும்னு நான் சொல்றதோட அர்த்தம் உங்களுக்கு புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன்.

சரி தோல்வியிலேர்ந்து நீங்க பாசிடிவ்வா என்ன பார்க்கிறீங்க?

சச்சின் டெண்டுல்கர் அபாரமா ஆடி வர்றார்! சேவாக் கொஞ்சம் ஒரு 20 ரன் வரைக்கும் ஆடினார்னா போதும் யுவ்ராஜ் சிங் பவுலிங் இம்ப்ரூவ் பண்ணனும்.
ஓஜா, ஜாகீர்கான், ஹர்பஜன் பேட்டிங்ல சீரியசா கவனம் செலுத்தணும். அவங்க அடிப்படைகளை நிச்சயம் ஆணித் தரமா போட்டுக்கணும் அப்பத்தான் டெஸ்ட் லெவல்ல நல்ல பேட் செய்ய முடியும்.

உங்க பேட்டிங் ரொம்ப ஏமாற்றமா இருக்கே?

நான் என்ன வச்சுகிட்டா வஞ்சனை செய்யறேன், நான் உப்பு விக்க போனா மழை பெய்யுது, மாவு விக்க போனா காத்தடிக்குது!

சச்சின் டெண்டுல்கரை பவுலிங் போட வைத்திருக்கலாமே?

நீங்க சொல்றத நானும் யோசிச்சேன், அவர் பாட்டுக்கு பேட்டிங்ல போடாத செஞ்சுரிய பவுலிங்ல போட்டுருவாரோன்னு கொஞ்சம் பயந்தேன்.

மொத்தமா என்ன சொல்லவர்றீங்க?

வின்னிங் இஸ் இம்பார்டெண்ட், இன்னும் 2 டெஸ்ட் இருக்கு? நல்லவேளை இனிமேல் நாம 0- 4 என்று உதைவாங்க வாய்ப்பில்ல. இதையே பெரிய பாசிடிவ்வா எடுத்துக்கிட்டு அடுத்த மேட்ச்லயாவது பந்துகளைத் திருப்ப பந்திலேயே ஸ்டியரிங் வைக்க ஏற்பாடு செய்ய முடியுமான்னு பார்க்கணும்.

Share this Story:

Follow Webdunia tamil