Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடல்ட்ஸ் ஒன்லி ஜோக்ஸ்!

அடல்ட்ஸ் ஒன்லி ஜோக்ஸ்!
, புதன், 27 மார்ச் 2013 (17:55 IST)
FILE
நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் போல் ஒரு குவிஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒரு அழகான பெண் செல்கிறாள். பரிசுத் தொகை 65,000 டாலர்கள்!

கேள்விகளுக்கு டாண் டாணென்று பதில் அளித்தாள் அந்தப் பெண், சக போட்டியாளர்களையும் ஒன்றுமில்லாமல் செய்து விட்டார்.

ஆனால் 65,000 டாலர்களுக்கான அந்த கேள்வி கேட்கப்படும் வேளையில் ஷோ நேரம் முடிந்து விடுகிறது. மறுநாள் தொடரும் என்று அந்தப் பெண்ணிடம் கூறப்படுகிறது.

அந்தப் பெண்ணுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. நாளை அந்தக் கடைசி கேள்வி என்னவாக இருக்கும் என்று மனதைப் போட்டு குழப்பிக் கொண்டிருந்தாள்.

அப்போது அவள் கணவன் அவளை வீட்டிற்கு காரில் அழைத்துச்சென்றான். அந்தப்பெண் நாளை அந்தக் கடைசி கேள்விக்கு பதில் அளித்து போட்டியில் வெல்லாமல் இன்று இரவு தூக்கம் இல்லை எனக்கு என்று கூறுகிறாள்.

கணவன் உடனே சரி நீ உள்ள போ. நான் கொஞ்சம் வெளியே போய்விட்டு வருகிறேன் என்கிறான்.

ஒரு 3 மணிநேரம் கழித்து கணவன் வருகிறான், அந்தக் கடைசி கேள்வி என்னவென்று கண்டுபிடித்து வந்துவிட்டேன், அதற்கான விடையும் என்னிடம் உள்ளது என்கிறான். மனைவி அசந்து போகிறாள் கணவனுக்கு மகிழ்ச்சியில் நாலைந்து 'இச்' களையும் வழங்குகிறாள்.

சரி கேள்வி என்ன என்கிறாள்: "ஆண்களின் உடலில் உள்ள 3 முக்கிய பிரதான உறுப்புகள் என்ன?

விடை: தலை, இருதயம், மற்றும் பாலுறுப்பு என்பதை கொச்சை ஆங்கிலத்தில் கூறுகிறான் கணவன். கணவனும் மனைவியும் பிறகு ஆழ்ந்த உறக்கத்திற்குச் செல்கிறார்கள்.

காலை மூன்றரை மணியளவில் கணவன் மனைவியை எழுப்புகிறான் கேள்வியை கேட்கிறான், அவளும் தலை, இருதயம், 'அந்த உறுப்பு' என்று பெயருடன் அழுத்தம் திருத்தமாக சொன்னாள்.

பிறகு அவள் பல் தேய்த்து முடித்தவுடன் மீண்டும் குவிஸ் கேள்வியை கேட்கிறான் கணவன், அவளும் அதே விடையை கூச்சமில்லாமல் கூறுகிறாள். இவ்வாறு குவிஸ் ஷோவுக்கு அந்தப் பெண் செல்வதற்கு முன்பாக நிறைய முறை அவளை கேள்வி கேட்டு பதில் சரியாக கூறுகிறாளா என்பதை கணவ சரிபார்த்தான்.

குவிஸ் அரங்கில்...

குவிஸ் அமைப்பாளர்: ஆணின் உடலில் 3 முக்கிய பிரதான உறுப்புகள் என்ன? உங்கள் டைம் ஸ்டார்ட் ஆகுது 10 வினாடிகள்.

பெண்: (தடுமாற்றத்துடன்) தலை

வெரி குட் இன்னும் 6 வினாடிகள் உள்ளது.

பெண்: இருதயம்

வெரி குட்... இன்னும் 4 வினாடிகள் உள்ளது.

பெண்: அது என்ன 3வது... ஐயையோ காலைல வரைக்கும் வாய்ல இருந்துச்சு வார்த்தையில வரமாட்டாங்குதே, இத்தனைக்கும் என் ஹஸ்பண்ட் இதை வச்சுத்தான் நைட் பூரா 'ட்ரில்'வாங்கினார். என்றாள்.

குவிஸ் அமைப்பாளர்: வெரி குட்! அதுதான் 3வது உறுப்பு. நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள் வாழ்த்துக்கள் என்றார்.

அந்தப் பெண்ணுக்கு கடைசி வரையில் தனக்கு ஏன் பரிசுத் தொகை கொடுக்கப்பட்டது என்பது புரியவேயில்லை.

அயர்லாந்து 'பார்' ஒன்றில் நுழைகிறாள் ஒரு குண்டுப்பெண்மணி. அனைவரும் அவளைப்பார்த்து ஆமாம் இங்கே வேற வந்துட்டாளாக்கும் என்று முனகினர்.

அந்தப் பெண் கையில்லாத ஒரு விதமான உடை அணிந்திருந்தாள். அவள் கஷ்கத்தில் பயங்கரமாக முடி வளர்ந்திருக்கிறது.

ஆனால் அவள் கவலைப்படாமல் இருகைகளையும் உயர்த்தி அடர்ந்த அந்த முடி தெரிய எனக்கு யார் மது வாங்கித் தருகிறீர்கள்? என்று கத்துகிறாள்.

அனைவரும் பேசாமல் தங்கள் வேலையில் ஈடுபட்டிருந்தனர். யாரும் அவளை கண்டு கொள்ளவேயில்லை.

ஆனால் மூலையில் குடித்து குடித்து மட்டையாகும் தருணத்தில் இருந்த ஒரு நபர் மட்டும் அந்த 'நடனமங்கைக்கு' ஒரு லார்ஜ் கொடுங்கள் என்றார்.

அந்தப் பெண் சரக்கை வாங்கி மடக்கென்று குடித்து முடித்தாள். ஆனால் அந்தப் பெண் மீண்டும் தனது அடர்ந்த கஷ்க முடியை காண்பித்தபடி இருகைகளையும் தூக்கி மீண்டும் எனக்கு ஒரு டிரின்க் யார் வாங்கித் தரப்போகிறீர்கள்? என்றாள்.

மீண்டும் அதே மட்டையாகும் மனிதன் 'அந்த நடன மங்கைக்கு மீண்டும் ஒரு டிரின்க் கொடுங்கள்' என்கிறான்.

பார் சரக்கு ஊற்றிக் கொடுக்கும் நபர் குடிகார மட்டையாளரைப் பார்த்து 'அவளுக்கு குடி வாங்கிக் கொடுப்பது உன் பிரச்சனை ஆனால் ஏன் அவளைப்போய் நடன மங்கை என்று அழைத்தாய் எனக்கு இதை இப்போதே கூறியாகவேண்டும்' என்கிறான்.

'அதுவா? அவ காலை எவ்வளவு உயரம் தூக்கினா பாத்தியா? அவ்வளவு உயரம் ஒரு பொண்ணு காலைத் தூக்கினால் அவள் நடன மங்கைதானே என்றான் அந்தக் குடிகாரன்.

அவள் முடி நிறைந்த கஷ்கம் தெரிய கைகளைத் தூக்கி கேட்டது நம் மட்டையாளருக்கு 'என்னவாக' தெரிந்திருக்கிறது பாருங்கள்!

ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் அதிகாரியாகப் பணிபுரிவருக்கு திருமணம் முடிந்து குழந்தை பிறக்கிறது. அவர் நிர்வாகத்திடம் சம்பள உயர்வு கேட்டார், நிர்வாகமும் இது நியாயமானதே என்றெண்ணி ஒப்புக்கொண்டது. அடுத்த குழந்தை பிறந்தவுடன் மீண்டும் அதிகாரி சம்பள உயர்விற்கு விண்ணப்பித்தார். மீண்டும் நிர்வாகம் ஒத்துழைத்தது.

பல வருடங்கள் கழித்து அதிகாரி 8 குழந்தைகள் பெற்ற பின்பு நிர்வாகம் செலவுகள் அதிகமாவதைத் தடுக்க கூட்டம் ஒன்றை போட்டு எல்லோரும் கொஞ்சம் கண்ட்ரோல்டா இருக்கனும். இது மாதிரியே போச்சுன்னா தாங்காது என அந்த அதிகாரியிடம் தொவித்தது.

உடனே அதிகாரி கோபமாக "குழந்தைப் பொறக்கறது கடவுளோட செயல்" என்றார். உடனே கூட்டத்தில் இருந்த இன்னொரு முதிய அதிகாரி "மழையும் வெயிலும், பனியும் கூடத்தான் கடவுள் செயல் ஆனா, நாம ரெயின் கோர்ட், குடை வைத்துக்கொள்கிறோமே" என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil