Publish Date: Sat, 30 May 2015 (18:25 IST)
Updated Date: Sat, 30 May 2015 (18:28 IST)
சிவகார்த்திகேயன், சூரி நடிக்கும் ’ரஜினி முருகன்’ படத்தின் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா பாடலின் மேக்கிங் வீடியோ.
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘ரஜினி முருகன். இத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை லிங்குசாமியின் சொந்த நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ என்று தொடங்கும் பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது. இப்பாடலை, சிவகார்த்திகேயன், சூரி, ஸ்ரீதிவ்யா, டி.இமான் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.