Publish Date: Fri, 05 Feb 2016 (09:14 IST)
Updated Date: Fri, 05 Feb 2016 (12:21 IST)
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் விஜய் நடித்து வரும் தெறி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தெறி. இந்த படத்தின் டீசர் திட்டமிட்டபடி, நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது.
விஜய்யுடன் சமந்தா, எமிஜாக்சன், பிரபு, ராதிகா சரத்குமார், சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்து வரும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். இந்த டீசர் ரசிகர்களை பெரிதும் உற்சாகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.