Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நயன்தாரா ஸ்டைலில் சோலோவா கலக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் - திட்டம் இரண்டு ட்ரைலர்!

நயன்தாரா ஸ்டைலில் சோலோவா கலக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் - திட்டம் இரண்டு ட்ரைலர்!
, வெள்ளி, 23 ஜூலை 2021 (19:41 IST)
மினி ஸ்டூடியோ மற்றும் சிக்ஸர் என்டர்டைன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் பிளான் பி. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் வெளியிட்டார்.
 
படத்துக்குப் பின்னர் பெயர் ’திட்டம் இரண்டு’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கும் இந்த படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்துள்ளார். கோகுல் பினாய் ஒளிப்பதிவில், பிரேம்குமார் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சஸ்பென்ஸ் மற்றும் திகில் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் எதிர்பார்ப்பு எழுந்திருந்த நிலையில் இப்போது இந்த படம் ஓடிடிக்கு சென்றுள்ளது.
 
சோனி லைவ் ஓடிடி தளம் வரிசையாக படங்களை வாங்கி வெளியிட்டு வரும் நிலையில் இன்று இப்படத்தின் ட்ரைலர் யூடியூபில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நயன்தாரா ஸ்டைலில் சோலோவா களமிறங்கியிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இப்படம் வருகிற ஜூலை 30 ஆம் தேதி ரிலிஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷுக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை !