Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்" எமோஷ்னலில் உருகும் கார்த்தி - தம்பி ட்ரைலர்!

Webdunia
செவ்வாய், 10 டிசம்பர் 2019 (17:26 IST)
பாபநாசம் புகழ் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் தம்பி. இப்படத்தில் சத்யராஜ் அப்பாவாக நடிக்க, ஜோதிகா கார்த்திக்கு அக்காவாக நடித்துள்ளார். 15 வருடத்திற்கு முன்பு வீட்டை விட்டு ஓடிய கார்த்தி மீண்டும் தனது குடும்படத்துடன் இணையும் போது ஏற்படும் பாசம், சண்டை , கோபம் என பல உணர்ச்சிகளை உள்ளடக்கி இப்படம் உருவாகியுள்ளது. 
 
2டி என்டர்டெய்ன்மெண்ட் மூலம் சூர்யா சொந்தமாக தயாரித்துள்ள இப்படத்தின் டீசர் அக்கா- தம்பி இடையேயான பாசப்பிணைப்பை வெளிப்படுத்தி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வருகிற டிசம்பர் மாதம் வெளியாக இருக்கும் இப்படத்தின் ட்ரைலர் சற்றுமுன் இணையத்தில் வெளிவந்து பாசிட்டீவ் விமர்சனத்தை பெற்று வருகிறது. 
 
15 வருடத்திற்கு முன்பு காணாமல் போன தம்பி திரும்பி வீடு திரும்பும்போது அவரது குடும்பத்தினரும் சொந்தங்களும் எவ்வாறு ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதையும் குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை கார்த்தி எப்படி சரி செய்கிறார் என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த ட்ரைலர் அமைந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments