கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல்: ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் நீதிமன்றத்தில் முறையீடு

Siva
திங்கள், 9 செப்டம்பர் 2024 (15:13 IST)
160 ஏக்கர் நிலத்திற்கு ரூ.730.86 கோடி வாடகை பாக்கியை செலுத்தாத விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி இன்று ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் ரேஸ் கோர்ஸ் மைதானத்தை தமிழ்நாடு அரசு, தனது கட்டுப்பாட்டில் எடுத்தது.

இந்த நிலையில் இதனை எதிர்த்து ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் சார்பில் அவசரமாக உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதுகுறித்த மனுவில் கால அவகாசம் கொடுக்காமல் சீல் வைக்கப்பட்டுள்ளது என வாதம் செய்யப்பட்டது.

அதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் இடத்திற்கான குத்தகையை ரத்து செய்வது தொடர்பாக நோட்டீஸ் கொடுத்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில்   தகவல் தெரிவித்தது.

மேலும் குத்தகை ரத்து குறித்து நோட்டீஸ் அளித்து காலி செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. எனவே, குத்தகை ரத்து குறித்த நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும் என அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதம் செய்தார்.  இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மனசு கஷ்டப்பட்டுத்தான் போயிருக்காரு.. ஏவிஎம் சரவணன் மறைவிற்கு காரணம்

நான் சிறை செல்ல எனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியர்தான் காரணம்: நடிகர் திலீப் பகிரங்க குற்றச்சாட்டு

கணவர் ப்ரஜினுக்காக பிக் பாஸ் வீட்டை விட்டு ஓடிய சான்ட்ரா: பரபரப்பு சம்பவம்!

23வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா: திரையிட தேர்வான 12 புதிய தமிழ் திரைப்படங்கள்!

அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை.. கம்பேக் கொடுத்த கேபிஒய் பாலா.. இதுல சிம்புவுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments