Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜுன் மாதம் மிரட்ட வரும் ’ஜுராஸிக் வேர்ல்ட்’ - ட்ரெய்லர்!

Advertiesment
ஜுராஸிக் வேர்ல்ட்
, செவ்வாய், 21 ஏப்ரல் 2015 (15:34 IST)
உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஒருசில படங்களில் ஜுராஸிக் பார்க்கும் ஒன்று. கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன் அழிந்து போன டைனோசர்ஸை ஸ்பீல்பெர்க் உருவாக்கி உலவவிட்டதை காண ஜனங்கள் ஆர்வமுடன் திரையரங்குகளில் திரண்டார்கள்.



முதலிரு பாகங்களை இயக்கியவர் மூன்றாவது பாகத்தில் இயக்குனர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார். நான்காவது பாகத்தை இயக்கும் பொறுப்பை Colin Trevorrow -விடம் தந்திருக்கிறக்ர். இவர் இதுவரை ஒரேயொரு படம் மட்டும் - சேஃபடி நாட் கியாரண்டி - இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
நான்காம் பாகமான ஜுராஸிக் வேர்ல்ட் திரைப்படத்தை இயக்கவில்லை என்றாலும் படத்தின் எக்ஸிக்யூட்டிவ் பொறுப்பை ஸ்பீல்பெர்க் ஏற்றுக் கொண்டிருக்கிறார். ரிக் ஜஃபா, அமண்டா சில்வர் படத்தின் திரைக்கதையை எழுதியிருக்கிறார்கள், ஜுன் மாதம் திரைக்கு வருகிறது. மேலும் இதன் ட்ரெய்லர் இப்போது வெளியாகி மிரட்டி வருகிறது.
 
’ஜுராஸிக் வேர்ல்ட்’ - ட்ரெய்லர்!
 

Share this Story:

Follow Webdunia tamil