Publish Date: Thu, 17 Nov 2016 (20:26 IST)
Updated Date: Thu, 17 Nov 2016 (20:29 IST)
‘பிச்சைக்காரன்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பின் விஜய் ஆண்டனியின் நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள திரைப்படம் ‘சைத்தான்’. இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.
இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்படம் நவ.17ம் தேதி (இன்று) வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ரூபாய் நோட்டு பிரச்சனை காரணமாக, மக்களிடையே பணத்தட்டுப்பாடு நிலவுவதால், இப்படம் டிசம்பர் 2ம் தேதி வெளியாக உள்ளதாக தற்போது அறிவித்துள்ளார்கள்.
இதற்கிடையில், சைத்தான் படத்தின் முதல் 5 நிமிடக் காட்சிகளை, இன்று இணையத்தில் வெளியிடப்படும் என படப்பிடிப்பு குழுவினர் அறிவித்திருந்தனர்.
அதேபோல், அந்த வீடியோ இன்று மாலை 8 மணிக்கு இணையத்தில் வெளியிடப்பட்டது.