Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிட்டு படத்துலயா நடிக்குற? ஓவியாவை ஓட ஓட விரட்டும் நெட்டிசன்கள்: மகா மட்டமா இருக்கும் 90ml டிரைலர்

பிட்டு படத்துலயா நடிக்குற? ஓவியாவை ஓட ஓட விரட்டும் நெட்டிசன்கள்: மகா மட்டமா இருக்கும் 90ml டிரைலர்
, சனி, 9 பிப்ரவரி 2019 (09:22 IST)
ஓவியா நடிப்பில் உருவாகி வரும் அடல்ட் ஓன்லி படமான 90 எம்.எல். படத்தின் டிரைலர் வெளியாகி நெகடீவ் விமர்சனங்களால் வைரலாகி வருகிறது.



 
அறிமுக இயக்குனர் அனீதா உதீப் இயக்கத்தில் பிக்பாஸ் புகழ் ஓவியா 90 ML நடித்துவருகிறார்.  அன்சூன் பால், மசூம் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு நடிகர் சிம்பு இசையமைத்துள்ளார். பப்பு, பார்ட்டி, சரக்கு போன்றவற்றை மையப்படுத்திய இப்படம் முழுக்க முழுக்க மோசமான  இரட்டை அர்த்தம் கொண்டு உருவாகியுள்ளது. 
 
பிக் பாஸ் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற நடிகை ஓவியா,  '90 ML' திரைப்படத்தின் முலமாக அதனை ஒட்டுமொத்த இழக்கப்போகிறார். 5 இளம் பெண்களின் வாழ்க்கையை  மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி மோசமான விமர்சனங்களால் வருறுத்தெடுக்கப்பட்டு வருகிறது .
 
லிப்லாக், சரக்கு, கஞ்சா என அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கி படுமோசமான அடல்ட் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலலாம் ஓகே…அப்போ கீழ இறங்கி வேலை செய்யமாட்டாங்களா என்றெல்லாம் கேக்கும் விதமாகவும், யாராச்சும் சூப்பர் மேட்டர் இருந்தா சொல்லுங்க என்று சொல்லுவதும், சரக்கு அடிச்சா அழுறீங்கனு தான கஞ்சாவுக்கு மாறுனோம் என்றெல்லாம் டபுள் மீனிங்கில்  ஓவியா எக்கச்சக்க அலப்பறைகளை செய்துள்ளார்.
 
இந்த ட்ரெய்லரை பார்த்த ஓவியா ஆர்மிஸ் செம்ம கடுப்பில் டிஸ்லைக் செய்துவருகின்றனர்.மேலும் பலர்  ஓவியாவை தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்து வருகின்றனர். 90 ML ட்ரைலர் முழுக்க முழுக்க நெகடீவ் விமர்சனங்களால் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. "இது ட்ரைலர் தான் இன்னும் மெயின் பிச்சர் இருக்கு" என ஓவியா ஆர்மிசை விடாமல் ஓட்டுகின்றனர் நெட்டிசன்ஸ். 

ட்ரைலர் லிங்க் இதோ!
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மலையாளத்தில் குட்டி ஜானு ! – கதாநாயகியான கௌரி கிஷன்