திகில் நிறைந்த நயன்தாராவின் "ஐரா" ட்ரைலர்!

Webdunia
புதன், 20 மார்ச் 2019 (17:47 IST)
சமூகவலைத்தளத்தில் பெரிதாக பேசப்பட்ட ‘லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களை இயக்கிய இயக்குனர் சர்ஜூன் இயக்கத்தில் முதல் முறையாக நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் ஐரா. இப்படத்தில், யோகி பாபு, கலையரசன் ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் 
 
மாயா, டோரா, அறம், கோலமாவு கோகிலா என கதாநாயகியை மையப்படுத்திய கதையை தேர்வுசெய்து நடிகை நயன்தாரா நடித்து வரும் நிலையில் இந்தப் படமும் அந்த வரிசையில் இணைந்துள்ளது.
 
ஹாரர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாராவின் இரு வித்தியாசமான தோற்றம் அனைவரையும் கவர்ந்தது. சமீபத்தில் இந்தப் படத்துக்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்தது . 
 
படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் சற்றுமுன் திகில் நிறைந்த இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. விறுவிறுப்பாக செம த்ரில்லாக இருக்கும் இந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 
 ஐரா படம் மார்ச் 28-ம் தேதி ரிலீசாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயன் அளவுக்கு எங்களிடம் பணம் இல்லை.. நடிகர் ஆரி ஆதங்கம்..!

சூர்யாவின் கையில் உள்ள கைக்குழந்தை யார்? சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்..!

தாய் கிழவி' வசூல் வேட்டை: இரண்டாம் நாளில் அதிரடி முன்னேற்றம்!

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: துபாயில் சிக்கிய நடிகர் அஜித்துக்கு என்ன ஆச்சு? ரசிகர்கள் கவலை..!

குழந்தை பெற திருமணம் அவசியமில்லை.. கருமுட்டைகளை சேமித்து வைத்துள்ளேன்: பிரபல நடிகை

அடுத்த கட்டுரையில்
Show comments