லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது
மூக்குத்தி அம்மனாக நயன்தாராவும் நடுத்தர குடும்பத்தில் உள்ள ஒரு வாலிபனாக ஆர்ஜே பாலாஜி நடித்துள்ளனர்
ஆர்ஜே பாலாஜி குடும்பத்தின் குல தெய்வமான மூக்குத்தி அம்மன் அவர்கள் முன் நேரடியாக தோன்றி அதன் பின் ஏற்படும் கலகலப்பான மற்றும் அழுத்தமான காட்சிகள் தான் இந்த படத்தின் கதை
மேலும் போலி சாமியார்களை தோலுரிக்கும் வகையான காட்சிகளும் பக்தி என்றால் என்ன என்பதை மக்கள் தவறாக எப்படி புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் வெளீப்படுத்தும் படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
மொத்தத்தில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் இதற்கு முன் வந்த பக்தி திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு ஆன்மிகம் மற்றும் அரசியல் ஆகிய இரண்டும் கலந்த ஒரு கலவையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது